Spread the love

பறிக்க போய் பறிக்கொடுத்த ஊழியர்

தனியார் நிதி நிறுவன ஊழியர் படாதபாடுபட்டு தனக்கு சொந்தமான பைக்கையும் பறிகொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமதி சுதா இவர் டிவிஎஸ் பைனான்ஸில் மாதத்தவணையில் டிவிஎஸ் ஜூபிட்டர் என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியிருக்கிறார்.

கடந்த மூன்று தவணைகள் 15,000 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தவணைக்காலம் தவறியதால் நிறுவனத்திலிருந்து வாகனத்தை பறிமுதல் செய்ய ஊழியரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. வந்த ஊழியர் திருமதி சுதா அவர்களின் வாகனத்தின் பெயரில் கூடுதலாக கடன் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அலுவலகத்தில் ஒருவரிடம் சுதாவை பேச வைத்துவிட்டு ஒருவர் சுதாவின் வாகனத்தை தூக்கிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. மற்றொருவர் அவரது வாகனத்தில் சென்றுள்ளார்.இதையடுத்து உஷாரான சுதா தனது கணவர் மற்றும் அண்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளார் அவர்களுடன் சேர்ந்து வந்த இருவரில் ஒருவனை விரட்டி சென்று மடக்கி பிடித்திருக்கிறார்கள்.

இவரது வாகனத்தை தூக்கி சென்றவரை இவர்கள் தூக்கிச்சென்று அதற்கு பதிலடியாக நிதி நிறுவன ஊழியரின் இரு சக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்து வைத்துக்கொண்டு அந்த ஊழியரை விரட்டி விட்டதாக தெரிகிறது.

நிதி நிறுவன ஊழியர் அடையாள அட்டை இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பதற்கான எந்த அத்தாட்சியும் இல்லாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்பாக காவல் நிலையத்தில் திருமதி சுதா அவர்களோ டிவிஎஸ் பைனான்ஸ் நிறுவனமோ இதுவரை எவ்வித புகாரும் கொடுக்கவில்லையாம்.

12500cookie-checkஇருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த ஊழியர் தனது வாகனத்தை பறிகொடுத்து ஓட்டம்

Leave a Reply

error: Content is protected !!