Spread the love

மாநாடு 3 March 2022

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 854 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. 6 கோடியே 87 லட்சத்து 79 ஆயிரத்து 182 பயனாளிகள் உள்ளனர். 39 மாவட்டங்களில் மொத்தம் 244 கிடங்குகள் உள்ளன. 34 ஆயிரத்து 773 நியாயவிலைக் கடைகள் உள்ளன.

திமுக அரசு பதவியேற்றதும் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்களை சரிபார்த்து தாமதமில்லாமல் அட்டைகளை விநியோகிக்க உத்தரவிடப்பட்டது.

குடும்ப அட்டைகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போல் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும், இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

22010cookie-checkஇந்த ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!