மாநாடு 26 November 2022
கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் மாடியில் இருந்து நேற்று கீழே விழுந்தார், இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளப்பள்ளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் நேற்று பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பெற்றோர்களோடு கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்த பிறகு சக தோழிகளோடு பேசிக்கொண்டிருந்திருந்தார் என்றும் அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார் என்று கூறப்படுகிறது.
மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார்கள் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்த காவலர்கள் நிகழ்விடத்தை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது அதில் மாணவி பேசும்போது கலை நிகழ்ச்சியை தாங்கள் கொண்டு வந்த செல்போனிலிருந்து எல்லாரும் வீடியோ எடுத்தாங்க ஒரு அக்கா போன் கொடுத்து என்னை வீடியோ எடுக்க சொன்னாங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன், அந்த அக்கா திரும்பவும் போன கொடுத்து அந்த அக்கா கிட்ட கொடு என்று சொன்னாங்க நான் வாங்கி கொடுத்தேன், இதை பார்த்த மிஸ் திட்டிட்டாங்க, எல்லாரும் என்ன பார்த்தாங்க, யாரும் என் கூட பேச மாட்டாங்க, டீச்சர்ஸ் ஒதுக்கி வைப்பாங்கன்னு பயந்து தான் மேலே இருந்து கீழே குதித்து விட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.