மாநாடு 12 February 2022
நடைப்பெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க தஞ்சாவூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வந்திருக்கிறார். தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம் பகுதியில் அமைந்துள்ள மணிரத்னம் திருமண மண்டபத்தில் அறிமுகக்கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் வேட்பாளர்களை ஆதரித்து மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துபாண்டி, தமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் காளியம்மாள், மற்றும் பலர் முன்னதாக வாழ்த்தி பேசினார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களும் மற்றும் வேட்பாளர்களும் மண்டபத்தை நிறைத்து வெளியிலும் நிரம்பி இருந்தார்கள்.
நிறைவாக அறிமுகப்படுத்தி பேசிய போது சீமான் முன்பெல்லாம் தமிழராகிய நாம் தான் உலகில் முதல் மொழி தமிழ் உலகின் முதல் மனிதனும் தமிழன் தான் என்று பேசினோம்.ஆனால் இப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் பேசுகிறார்,
இந்தியாவில் அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் பலர் ஆணுக்கு பெண் சமம் என்று பல காலமாக பேசி கொண்டிருந்த நேரத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்று பேசி செல்லாமல் அதை சட்ட மன்ற தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் செய்து காட்டிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றார். மேலும் பேசுகையில் சில வாடகை வாயை வைத்து கொண்டு பேசும் திமுகவுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன் எனது நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு சிலர் வந்ததாக பேசுபவர்களே இங்கு நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களும் நான் உட்பட திமுககாரன் தான், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த 30லட்சம் ஓட்டும் முன்பு திமுகவிற்கு விழுந்த ஓட்டு தான் நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும் என்றார். முன்னதாக தொடர்வண்டி நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செந்தமிழன் சீமான் அவர்களை வரவேற்று அழைத்து வந்தார்கள்.