மாநாடு 1 March 2022
இன்று சிவராத்திரியை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா இன்று மாலை தொடங்கி நாளை காலை வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,சுப.வீரபாண்டியன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, உள்ளிட்ட தலைவர்கள் அரசின் சார்பாக இந்த விழாவை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் இருப்பினும் திட்டமிட்டபடி இந்த சிவராத்திரி விழா அரசு சார்பாக இன்று மாலையிலிருந்து நாளை காலை வரை நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று உலகெங்கும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அரசு சார்பில் விழா நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணியின் அறிக்கையை ஒரு மாற்றுக் கருத்தாகவே எடுத்துக் கொள்வதாகவும் அவருடைய கருத்தையும் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் கூறி உள்ளார். மேலும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிப்பதே ஒரு ஆரோக்கியமான நடைமுறை என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.