மாநாடு 09 February 2022
சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி
நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிட நேரிடும்.
விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது.இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது :
தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்குகிறது மேலும் முது வலியை குறைக்கிறது. இந்த நிலை இடுப்பு எலும்புகளை திறந்த நிலையில் வைப்பதுடன் கால்களை நெகிழ்வாக்குகிறது. கணுக்கால் மற்றும் கால் தசைகள் வலுப்பெறுகிறது.
முழங்காலை மடக்கி வைத்திருப்பது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள்.