மாநாடு 8 April 2022
சமீப காலமாக மதுப்பழக்கம் ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் தொற்றிக்கொண்டு உள்ளதற்கு ஆதாரமாக டாஸ்மாக் மதுபானங்களை பெண்களே சென்று வரிசையில் நின்று வாங்குவதும் அதை அருந்துவதுமாக வலையொளிகளில் வந்த காட்சிகள் சமூக அக்கறையுள்ள அனைவரையும் ஒரு வித கவலையில் ஆழ்த்தியது அதன் பிறகு இப்போது சிறுவர்கள் முதல் மாணவர்கள் ,மாணவிகள் வரை மது அருந்தும் வீடியோக்கள் இணையங்களில் பரவி அனைவருக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியது. இதுபோன்ற தீய செயல்களுக்கு எளிதாக மாணவர்கள் மாணவிகள் ஆட்பட்டு குடி நோயாளிகளாக ஆவதற்கு சுலபமாக இருக்கும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளை அதிகமாக திறந்து பள்ளி ,கல்லூரி ,பேருந்து நிலையங்கள், பெண்கள் நடமாடும் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசே நடத்துவது என்பது குடிபோதையால் இங்கு நடக்கும் குற்றங்களுக்கு அரசே துணை போகும் செயலாகும்.
காஞ்சிபுரம் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மீது அமர்ந்து மதுபானம் குடித்துள்ளனர். இதை சக மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இது இணையதளத்தின் வைரலானது.