Spread the love

மாநாடு 12 August 2022

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் ,போதையோடு கைகுலுக்க கூடாது, போதையால் பல குடும்பங்கள் அழிந்து வருகின்றது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் பேசுவதோடு மட்டுமல்லாமல் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து முழுவதும் ஒழித்து விட வேண்டும் என்று தீவிரமாக தீர்மானித்து விட்டார், அதை மெய்ப்பிக்கும் விதமாக நேற்று போதை விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது, அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் ,தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள் ,உறுதிமொழி ஏற்றார்கள். இவ்வாறு பல நடவடிக்கைகளை நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் அவர் பயந்தது போலவே திண்டுக்கல்லில் ஒருவர் போதைக்கு அடிமையாகி போதை நோயால் அவதிப்பட்டு இறந்திருக்கிறார் என்பது மிகப்பெரிய துயரம்,

திண்டுக்கல் மாவட்டம் சங்கால்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு 30 வயதுடைய மதன்குமார் என்கிற மகன் இருந்திருக்கிறார், மதன்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகி இருக்கிறார் அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி பயங்கர வயிற்று வலி இருந்திருக்கிறது, சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது, வாழ்க்கையில் வெறுப்படைந்த மதன்குமார் வேறு விஷத்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார் இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றார்கள், ஆனால் சிகிச்சை பலனின்றி மதன் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செய்தி அறிந்து வந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர் மரணத்திற்கு காரணமான போதை பொருளை ஒழிக்க வேண்டியது முதல்வரின் கடமை முதல்வர் முன்வந்து செய்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

47050cookie-checkமுதல்வர் எச்சரித்தும் போதையால் மரணம்

Leave a Reply

error: Content is protected !!