Spread the love

மாநாடு 27 February 2022

இப்போது தஞ்சாவூர் கும்பகோணம் இடையே பள்ளி அக்ரஹாரம் பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணியின் காரணமாக சாலைகளின் ஓரங்களில் உள்ள ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்படுகின்றன.

இது இயற்கை ஆர்வலர்களுக்கு மிகப் பெரிய மன வேதனையை தருகிறது.

முன்பெல்லாம் குளங்களை வெட்டுவார்கள்,

மரங்களை நடுவார்கள்

இயற்கை சூழலோடு இணைந்து வாழ்ந்தார்கள் இப்போது மனிதகுல வளர்ச்சி என்கிற பெயரில் நாகரீகத்தை நோக்கி ஓடுவதாக நினைத்து.

எங்கு ஓடுகிறோம்,எதற்காக ஓடுகிறோம்? என்பதே தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள்.வேகமாக செல்வதற்காக சாலைகளில் வசதி வேண்டும் என்று சாலைகளை அகலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நாம் ஒன்றை மறந்து விட்டோம்.வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சாலைகளின் ஓரங்களில் இருந்த பல வகையான மரங்களை பல நூற்றாண்டுகளாக இருந்த மரங்களை புயலுக்கு கூட கீழே விழாத மரங்களை புடுங்கி வெட்டி எரிக்கிறோம்.

நமக்கு நாமே இதற்கு ஒரு காரணமும் சொல்கிறோம்.வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக சாலைகளை அகலப்படுத்த வேண்டியது அவசியம் தானே அதற்கு இடையூறாக இருக்கும் மரங்களை வெட்டுவது சரிதானே என்று சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

வேகமாக செல்ல வேண்டும் என்றுதானே மரத்தை வெட்டினோம். வெளியே வர முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரியாத கிருமி ஒன்று வீட்டுக்குள் நம்மை அடைத்ததை மறந்து விடுகிறோம்.

இதுபோல் ஒரு சூழல் உருவாகுவதற்கு இயற்கையை மதித்து இயற்கையோடு ஒன்றி இயற்கையாக நாம் வாழாததும் ஒரு காரணம் என்பதை நாம் உணர மறந்து விட்டோம்.

இன்னுமும் நம்மூரில் எல்லாம் வாகனங்கள் அதிக அளவு புகையை வெளியேற்றிக் கொண்டு தான் இருக்கிறது அதை கட்டுப்படுத்தி சரிசெய்து கண் எரிச்சல் வராமலும், காற்று மாசுபடாமல் இருப்பதற்கு கட்டாயம் மரங்கள் தேவை.

இன்றைய நவீன உலகத்தில் குறுகிய நேரத்தில் அத்தனை மரங்களையும் கூட வெட்டி விடலாம் நட்டு வைத்து வளர்ப்பதற்கு எத்தனை நூறு ஆண்டுகள் ஆகும் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு மரத்தை நாம் வெட்ட வேண்டும் என்றால் அதற்கு ஈடாக அரசு புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் 10 செடிகளையாவது நட்டு ஓராண்டு கழித்து தான் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்ற சட்டம் போட்டு கடைப்பிடித்தால் தான் இதை சரி செய்ய முடியும்.இருக்கிற சாலைகளே பெரும் குண்டும் குழியுமாக தான் இருக்கிறது அதை சரி செய்தால் கூட போதும் என்ற நிலையில், போக்குவரத்துக்காக சாலை போடுகிறோம் என்ற பெயரில் மரங்களை வெட்டுவது அடுத்த தலைமுறையின் மூச்சுக்காற்றை நாமே நிறுத்துவதற்கு சமம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

எந்த சாலையும் உடனடியாக திட்டமிட்டு உடனடியாக போடுவது இல்லைதானே அப்படி என்றால் மரத்தை நட்டு விட்டு வெட்ட வாருங்கள்.என்கிறோம் நாங்கள். எந்தத் துன்பமும் தீயவர்களா வருவதல்ல அதை வேடிக்கை பார்க்கும் நல்லவர்களால் தான் வருகிறது. அரசு இதைக் கவனத்தில் கொள்ளுமா? க.இராம்குமார்

21330cookie-checkதமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?ஆபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!