Spread the love

மாநாடு 1 June 2022

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு உணவிற்கு பணம் கொடுத்துவிட்டு பார்த்தபோது தான் கொண்டு வந்திருந்த 5 கிலோ தங்க நகை பையை காணவில்லை என்று தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தங்க நகை மொத்த வியாபாரி மணி என்பவர் புகார் அளித்துள்ளார் அதன் விபரம் பின்வருமாறு :

சென்னையை சேர்ந்த 52 வயதுடைய மணி என்பவர் தங்க நகை மொத்த வியாபாரம் செய்பவர் என்று கூறப்படுகிறது, சென்னையில் இருந்து தங்க நகைகளை தஞ்சாவூர் எடுத்துவந்து கடைகளுக்கு கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாம். அதேபோல தஞ்சைக்கு 7 கிலோ தங்க நகைகளை எடுத்து வந்ததாகவும், அதில் 2 கிலோ நகைகளை கடைகளுக்கு கொடுத்து விட்டு இரவு உணவு அருந்துவதற்காக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவு விடுதிக்கு 7 மணி அளவில் சென்று உணவருந்தியதாகவும், அப்போது தான் கொண்டு வந்திருந்த பையில் 5 கிலோ தங்க நகைகள் இருந்ததாகவும், உணவு அருந்திவிட்டு உணவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு பார்த்தபோது தான் வைத்திருந்த 5 கிலோ தங்க நகையை காணவில்லை என்றும் பணம் கொடுப்பதற்காக நின்று கொண்டிருந்தபோது தன்னைச் சுற்றி ஒரே நிற சீருடை அணிந்த நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தங்க நகை வியாபாரி மணி புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து மேற்கு காவல் நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் அதன்படி சீருடை அணிந்து சுற்றி நின்றவர்கள் நகைகளைத் திருடினார்களா அல்லது இவர் சொல்லும் நகை திருட்டு சம்பவம் எந்த அளவு உண்மை என்பது காவல்துறையின் விசாரணையில் விரைவில் தெரியவரும்.

இருந்தபோதும் காவலர்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறப்படி பொது இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது நமது கடமை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஏனெனில் முன்பெல்லாம் இதுபோன்று திருட்டு போனாலும் கூட அவர்களின் அங்க அடையாளங்களை வைத்து முகவரிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம் .ஆனால் தற்போது பெரும்பாலான கடைகளை நடத்துபவர்களும் வேற மாநிலத்தவர் அங்கு வேலை பார்ப்பவர்களும் பெரும்பாலும் வேறு மாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள் ,அது மட்டுமல்லாமல் தற்போது நகை திருட்டு போனதாக புகார்  அளிக்கப்பட்டிருக்கும் அந்த பகுதியின் 90 விழுக்காடு வணிகத்தை வேற்று மாநிலத்தவர்கள் செய்துவருகிறார்கள். எனவே அங்கு அதிகமாக வேற்று மாநிலத்தவர்கள் வந்து போவதால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அடையாள அட்டைகளும் மாநில நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ தற்போதைய நிலையில் வழங்கியிருக்கவில்லை நிலை இப்படி இருக்கும் போது கண்காணிப்பு கேமராவில் உருவங்களை கண்டறிந்தால் கூட அவர்களின் முகவரிகளை கண்டறிவது மிகவும் கடினம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

37250cookie-checkதஞ்சாவூரில் 5 கிலோ தங்க நகை கொள்ளை பகீர் புகார் மக்களே உஷார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!