Spread the love

மாநாடு 17 March 2022

தஞ்சாவூர் நகர பகுதியை இணைக்கும் பாலமான இரண்டு முக்கிய ஆற்றுப்பாலங்கள் வழிகள் துண்டிக்கப்பட்டு பாலங்களை அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட உள்ளது இதற்கு முன்னறிவிப்பாக கடந்த 6ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கையின் மூலம் பத்திரிக்கையின் வாயிலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதன்படி நேற்று முதல் முழுவதுமாக கருந்தட்டங்குடி பகுதி துண்டிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றுப்பதையில் கனரக வாகனங்கள் எதுவும் வருகிறதா என்பது தெரியாத நிலையில் அந்த சாலை பல இடங்களில் பள்ளமும் மேடுமாகவும் கற்கள் பெயர்ந்தும் பாதை மிகவும் பழுதானதாக உள்ளது.

இதை நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வில்லை என்றால் இன்னும் ஓரிரு நாளில் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக மாறிவிடும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

 

தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை சாலையில் கி.மீ. 68/4ல் வடவாறு கரந்தை மற்றும் கி.மீ. 70/4ல் கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போது உள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக இருவழித்தட அகலம் கொண்ட இரண்டு புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்படவுள்ளது.

கரந்தை – வடவாறு பாலப் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு

கரந்தை வடவாறு பாலப்பணி நடைபெறுவதால் 16.03.2022 நேற்று  முதல் இவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு, கும்பகோணம் மற்றும் திருவையாறு சாலையிருந்து வரும் நகரப் பேருந்துகள் , இருசக்கரநான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்குவாசல், சிரேஸ் சத்திரம் சாலை, ஏ.ஓய்.ஏ நாடார் சாலை வழியாக கொடிமரத்துமூலை வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும்.

சென்னைஅரியலூர்கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியில் இருந்து வரும் புறநகர் பேரூந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை ரவுண்டானா, தாமரை, பெஸ்ட் பள்ளிகள் வழியாக மாரியம்மன்கோயில் புறவழிச்சாலை வழியாக தொல்காப்பியர் சதுக்கம் வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும்.

25300cookie-checkதஞ்சாவூரில் மாற்றுப்பாதை சரியில்லாததால் மக்கள் அவதி

Leave a Reply

error: Content is protected !!