மாநாடு 2 April 2022
தஞ்சாவூரின் நகரை இணைக்கும் முக்கிய பாலங்களாக இருந்த ஆற்றுப்பாலங்கள் அகலப்படுத்தி சீரமைத்து புதிதாக கட்டுவதற்காக இடித்து மாற்றுப் பாதைகள் வழியாக பயணிக்கும் படி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கைகளின் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார் .
அதன்படி தஞ்சாவூர் நகரப் பகுதியில் இருந்த இர்வின் ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டு சுற்றுலா மாளிகை வழியாகவும், ஆத்து பாலத்திற்கு மறுபுறத்தில் இருந்து வருபவர்கள் நீதிமன்ற சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது அதேபோல கருந்தட்டாங்குடி பாலம் இடிக்கப்பட்டு மாற்று வழியாக பழைய திருவையாறு சாலையை பயன்படுத்தும்படி கூறியிருந்தார்கள்.
ஆனால் அந்த மாற்று பாதையானது அப்போதே சரியில்லாத நிலையில் தான் இருந்தது.இதை எச்சரிக்கும் விதமாக நமது மாநாடு இதழில் அப்போதே செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு மேலாக அந்த பாதையில் பெண்கள், முதியவர்கள், யாரும் எளிதாக பயணிக்க முடியாத அளவிற்கு பழுதாக உள்ளது அதைப் பற்றி தகவல் தெரிவித்து பாதையை சரிசெய்யும் விதமாக தொடர்புகொண்டு அந்த மண்டலத்தின் பொறியாளராக இருக்கும் பொறியாளர் அறச்செல்வி அவர்களை தொடர்பு கொண்டு சாலைகள் மிகவும் பழுதாக இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் சாலையை அடைத்துக் கொண்டு குளம்போல இருக்கிறது அதனால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருக்கிறது என்று கூறினோம். எப்போது இது சரி செய்யப்படும் என நாம் கேட்டோம்.
பொறியாளர் அறச்செல்வி கூறியதாவது :
நான் அந்த பகுதிக்கு பொறுப்பெடுத்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது உடனடியாக அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர் நிரம்பி உள்ள பள்ளத்தை சரி செய்ய அந்த மண்டலத்தின் பொறுப்பாளராக பணித்திருக்கும் ரூபன் அவர்களிடம் சொல்லி உங்களிடம் தொடர்பு கொள்ள சொல்கிறேன் அவர் சரி செய்வார் என்றார்.
சிறிது நேரத்தில் ரூபன் நம்மிடம் தொடர்பு கொண்டார் அவரிடமும் அந்த பகுதியை அந்த பகுதியில் உள்ள பிரச்சனையை நாம் எடுத்துக் கூறினோம் கேட்டுக்கொண்டு ரூபன் அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றினால் தான் அங்கு தண்ணி நிற்பதை சரி செய்ய முடியும் ஏனென்றால் அங்கு 4 குழாய்கள் இணைப்பு இருக்கிறது என்றார் அதற்கு நாம் இரவு நேரங்களிலாவது இதை சரி செய்யலாமே என்றோம்.
அதுமட்டுமல்லாமல் அந்த பாலம் துண்டிக்கப்பட்டு இதுதான் மாற்று பாதை என்று தீர்மானிக்கப்பட்டு உறுதி செய்தவுடன் அந்த சாலையை முழுவதுமாக சரி செய்திருக்க வேண்டுமல்லவா இப்படி இருப்பதனால் முதியவர்களும் பெண்களும் இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் செல்வதென்பது மிகவும் கடினமாக இருக்கிறது,
அதுமட்டுமல்லாமல் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் அந்த பகுதியில் வந்தாள் மிகவும் இடையூறாக இருக்கும் அல்லவா இதை முன்கூட்டி சுட்டிக்காட்டும் விதமாக தான் மார்ச் 17ஆம் தேதி நமது மாநாடு இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்று கூறினோம் .
இதனை கேட்டுக்கொண்ட ரூபன் தனது மேலதிகாரிகளை தொடர்புகொண்டு சரி செய்து விடுவதாக கூறினார்.
நமது வேண்டுகோள் எல்லாம் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே.
செய்தி:க.இராம்குமார்
புகைப்பட உதவி :S. M.சுப்பு