மாநாடு 10 February 2022
நடைபெறவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுககூட்டணியில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. இதில் எப்போதும் கடைப்பிடிக்கும் வழக்கங்களை இந்த முறை வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடங்கி கூட்டணிக்கான இடங்களைப்பங்கிடுவதில் மேற்கொண்டு ஒன்றில் கூட காங்கிரஸ் கட்சியின் மரபை இவர்கள் கடைப்பிடிக்கவில்லை இதன் காரணமாக சாதாரணமாகவே கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களிடம் செல்வாக்குப்பெற்ற வேட்பாளர்கள் நல்ல மனிதர்கள் எங்களிடம் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது, இந்த செயல் ஐயா கர்மவீரர் காமராசர் வழியில் வந்த எங்களைப்போன்ற பாரம்பரியமிக்க காங்கிரஸ்காரர்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறுகிறார் தஞ்சை மாநகர் மாவட்ட அமைப்பு மற்றும் செய்தி தொடர்பாளராக இருக்கின்ற கோவி.மோகன் அவர்கள்.
மேலும் அவர் கூறுகையில் ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் 3 முறை கவுன்சிலருக்கு நின்று அதில் வெற்றியும் பெற்று மக்களுக்கு நன்கு தெரிந்த சிறந்த வேட்பாளருக்கு கூட இந்த முறை வாய்ப்பு தரவில்லை அதுமட்டுமல்லாமல்,அந்த வேட்பாளர் சுயேட்சையாக இந்த முறை போட்டியிடுகிறார் இதுபோல தஞ்சையில் மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் திருச்சியில் கூட இப்படித்தான் நடந்திருக்கிறது.
இப்படியே போனால் கட்சிக்கு நல்லது அல்ல எங்களைப்போன்றோருக்கு மன வேதனையை உண்டு பண்ணுகிறது. தஞ்சாவூரில் இன்னொரு வார்டில் கூட அந்த பகுதிக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும், சம்பந்தமே இல்லாதவரை மேலிடம் நிறுத்தி இருக்கிறது.
இதற்கெல்லாம் ஒரு வகையில் இப்போது மாவட்ட தலைவராக இருக்கின்ற பி.ஜி.ராஜேந்திரனும் காரணம் அவருக்கு தஞ்சாவூர் பகுதியைப்பற்றி முழுமையாக தெரியாது ஏனென்றால் அவரின் சொந்த ஊர் கொரடாச்சேரி திருவாரூர் மாவட்டம் இப்படி இருக்கும் போது தஞ்சாவூரில் எந்த வார்டில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது ,யாரை நிறுத்தினாள் வெல்வார்கள் என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை அப்படி இருக்கும் போது இங்கு பாரம்பரியமாக காங்கிரஸில் இருப்பவர்களிடம் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கலாம் அதை விட்டுவிட்டு எங்கள் மேலிடத் தலைமைச்சென்னையிலிருந்து ஒரு தாளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை குறிப்பிடுவதும் அவர்களை வேட்பாளராக நிறுத்துவதும் இதற்கு முன் எங்கள் கட்சியில் நடந்தது இல்லை என்றார் மேலும் அவர் கூறுகையில்.
காங்கிரஸ் இயக்கத்தில் கடந்த காலங்களில் அய்யா. G.K. மூப்பனார் அவர்கள் எங்களது தஞ்சை மாவட்ட தலைவராக பதவி வகித்த காலத்தில்
இருந்து காங்கிரஸ் தனித்து நின்று தேர்தல்களை சந்திக்கும் நேரங்களில்
அது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற.தேர்தலாக இருந்தாலும். வேட்பாளர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க இறுதி முடிவு
எடுக்க அந்தந்த தொகுதி வாரியாக நகர தலைவர்களால்.தாலுகா கமிட்டி தலைவர்களால் ஊழியர் கூட்டங்கள்.
கருத்து கேட்பு கூட்டங்கள் கூட்டப்பட்டு தொண்டர்களிடம் பல கட்டங்களாக ஆலோசனைகள் பெறப்பட்டு அதனை மாவட்டதலைவரிடம் தெரிவிப்பது வழக்கமாக இருந்து வந்தது
அதனடிப்படையில் மாவட்ட தலைவர் மாநிலதலைமைக்கு வேட்பாளர்களை
பரிந்துரை செய்வார் அதன் பின்னர் மாநில தலைவர் வேட்பாளர்களை அறிவிப்பார்.பெரும்பாலும் மாவட்ட தலைவர் பரிந்துரை செய்யும் வேட்பாளர்களில் மாற்றமிருக்காது.
இதேபோல் நகரசபை.மற்றும் பஞ்சாயத்து தலைவருக்கு உறுப்பினருக்கு போட்டியிட விரும்பும் காங்கிரஸ்கட்சி நண்பர்களை தேர்ந்தெடுக்க பல கட்டங்களாக கிராம கமிட்டி தாலுகா
கமிட்டியின் தலைவர்கள் வார்டு தலைவர்கள்.நகர தலைவர்கள் என பகுதி வாரியாக ஊழியர் கூட்டங்கள் கூட்டப்பட்டு தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் பின் அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பட்டியல் தரப்பட்டு மாவட்ட தலைவரால் திறம்பட பரிசீலிக்கப்பட்டு அதன்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் அதுபோல் அறிவிக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெறும்பாலும் வெற்றி பெறுவார்கள்.
இதே போல் காங்கிரஸ் தி.மு.கழகம் மற்றும் அ.இ.அ.தி.மு.கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கபடுவதற்க்கு முன்பாகவே அது பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும். நகராட்சி.பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும்
அந்தந்தபகுதியின்.மாவட்டகாங்கிரஸ் நிர்வாகிகள்.நகர தலைவர்கள்.வட்டாரகிராம கமிட்டி தலைவர்கள் அவர்கள் சார்ந்த பகுதிகளில் கட்சியின் ஊழியர் கூட்டங்களை கூட்டிபோட்டியிட விருப்பம் தெரிவிக்கும் வேட்பாளர்கள்
எத்தனை ஆன்டுகளாக கட்சியில் இருக்கிறார்கள் அவர்களின் கட்சி பனிகள். அவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி உள்ளது.அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் வெற்றி பெறுவார்களா என பல்வேறு கோணங்களில் பரிசீலித்து மற்ற தொண்டர்களிடமும் கருத்து கேட்ட பின்னர்.
தோழமை கட்சியினரிடம் பேச்சு
வார்த்தை நடத்த யார் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடமும் தொண்டர்களிடமும் கருத்து கேட்கப்படும்.அதன் அடிப்
படையில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பேச்சுவார்த்தையின் போது
தோழமை கட்சியினருடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்பார்கள்.
பேச்சு வார்த்தையின் போது தோழமை கட்சியினர் அவர்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்கிற வார்டுகளை அல்லது தொகுதிகளை அவர்கள் வசம் வைத்து கொன்டு அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவான இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் பேச்சு வார்த்தையை தொடங்குவார்கள்
நாம் தோழமை கட்சியினரிடம்.நாம் கேட்கும் வார்டில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் பெயரை சொன்னவுடன்.
இவர்கள் தகுதியான வேட்பாளர்கள்.இவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என தோழமை கட்சியினரும் நினைத்து அவர்களுக்கு சீட்டு தரமாட்டார்கள்
அப்படி அடையாளம் காட்டப்படும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் வார்டில் அவர்களின் வேட்பாளரை நிறுத்தினால் மிக எளிதில் வெற்றி பெறலாம் என தோழமை கட்சியினர் நினைத்து நமக்கு ஒதுக்கீடு செய்ய மறுப்பார்கள்.
தோழமை கட்சியினரை எந்த வகையிலும் நாம் குறை சொல்ல முடியாது அவர்கள் கட்சி வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.
காங்கிரஸ் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு யார் யார் செல்வது எப்ப்டி பேசுவது
எந்தெந்த வார்டுகளை கேட்பது அப்படி
கேட்கும் வார்டுகளில் வெற்றிபெற செல்வாக்குள்ள வேட்பாளராக யாரை நிறுத்துவது.என்றவற்றை சற்றும் யோசிக்காமல் அது சம்பந்தமான கருத்துக்களை தொண்டர்களிடம் கேட்காமல் தோழமை கட்சியினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரிய
வில்லை
இது போக நகர் மன்ற வார்டு தேர்தல் பேச்சு வார்த்தைக்கு செல்பவர்கள்.
மற்றும் தேர்தல் பனி குழுவினரை
அந்தந்த நகர மாவட்ட கமிட்டிகளை தொண்டர்களிடம் கருத்து கேட்காமல் சென்னையிலிருக்கும் மாநில தலைமை
அறிவிப்பது.நல்ல உதாரனமாக தெரியவில்லை.
இதே போல் கட்சிக்கு உழைத்தவர்கள்
வார்டுகளில் செல்வாக்குமிக்கவர்கள்
.நகர் மன்றத்தில் உறுப்பினராக பனியாற்றி மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்தவர்களை புறக்கணித்து
விட்டு மாநில தலைவர்கள் சிலரின் சிபாரில் மக்களிடம் அறிமுகம் சற்றும் இல்லாத பலர் சீட்டு பெறும் நடை
முறைகள் பல பகுதிகளில் நடைபெற்றுவருகிறது இதன் காரணமாக வெற்றி வேட்பாளர்கள் பலர் சுயேட்சை வேட்பாளர்களாக நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விடுகிறது
இதுபோன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தால் உண்மை தொண்டர்கள் கட்சியில் நீடிப்பார்களா என்பது கேள்வி குறியே என்று ஆதங்கப்பட்டார் கட்சி சார்பற்று அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய Rtn.கோவி.மோகன் அவர்கள்.