மாநாடு 01 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள கண்டியூரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது வீரசிங்கம்பேட்டை என்னும் கிராமம்.
இயற்கை எழில் கொஞ்சும் மனதுக்கு ரம்யமான சூழலில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு சர்வ சாதாரணமாக ஏழை பணக்காரர் சாதி மத வேறுபாடு இன்றி உள்ளூரிகளில் இருந்தும், வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்தும் எண்ணில் அடங்கா பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஊரின் அருகில் உள்ள திருவையாறு, திருவேதிக்குடி, திருப்பழனம் ,திருக்கண்டியூர் போன்ற பல்வேறு வரலாற்று புகழ்மிக்க கோயில்கள் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு பல்வேறு மக்களும் பல்வேறு கோயில்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று தங்களது மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் ,புத்துணர்வாகவும் வைத்துக் கொள்ள எண்ணி செல்கிறார்கள், இதனால் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதேபோல தஞ்சாவூர் பகுதியில் தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் ,தஞ்சை பெருவுடையார் திருக்கோயில், குழந்தை இயேசு கோயில், வியாகுல மாதா கோயில், பூண்டி மாதா கோயில், வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களிலும் மக்கள் கூடி, வேண்டி, கொண்டாடி மகிழ்கின்றனர்.
யாருக்கும் தீங்கிழைக்காமல், மனிதத்தை போற்றும் விதமாக, தூய்மையாக கொண்டாடப்படும் அத்தனை கொண்டாட்டங்களும் தேவையான ஒன்றே!
மனிதத்தை நேசித்து ,மண் வளம் பெற வாழும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் மாநாடு செய்தி குழுமத்தின் 2023 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.