Spread the love

மாநாடு 5 March 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது.

இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், தமிழ்க தொழில் வளர்ச்சி , மின்விநியோகத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளதாகவும் , நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இதற்கிடையில் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து புறப்பட்ட 4 அமைச்சர்கள், விமானம் கோளாறு காரணமாக அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில், மற்ற அமைச்சர்களுடன் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்தகூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது

22920cookie-checkஇன்று மாலை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!