மாநாடு 26 July 2022
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கலைக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது : கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன், சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் தனக்கு மன வேதனையை தந்ததாகவும், கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவர்களுக்கு பட்டம் மட்டும் போதாது எனவும், தன்னம்பிக்கையும் மன உறுதியும் வேண்டும் என்ற முதலமைச்சர், மாணவிகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்று தரும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.