மாநாடு 18 January 2023
தஞ்சாவூர் அருகில் உள்ள பூண்டி சாலியமங்கலம் சுற்றியுள்ள ஊர்களில் 19ஆம் தேதி நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி பூண்டி, ராகவாம்பாள் புரம், சாலியமங்கலம், திருபுவனம், மலையர் நத்தம் , குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரெங்கநாதபுரம், சூரியகோட்டை, கம்பர் நத்தம், அருந்தவபுரம், வாளமரக்கோட்டை, ஆர்சுத்திபட்டு, அருமலைக்கோட்டை, சின்னப்புள்ளி குடிக்காடு, நார்தேவன் குடிக்காடு, அரசப்பட்டு ,வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள் புரம், பனையக்கோட்டை, சடையார் கோயில், துறையுண்டார் கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் பூண்டி சாலியமங்கலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.