மாநாடு 19 மே 2023
தஞ்சாவூர் மாநகராட்சியில் பல சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிவோம்.
பல தெருக்கள் நோண்டிப் போடப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு மக்கள் மேயரை பார்த்து மனு கொடுத்த பிறகும் கூட பல நாட்கள் சாலைகள் போடப்படாமல் இருந்ததாகவும் வேலை தொடங்கினாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுவதாகவும் கூறுகின்றார்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சி நிலைமை அப்படி இருக்க தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான விஜயா தியேட்டர் அருகில் பர்மா பஜார் சாலையில் பாதாள சாக்கடை மூடப்பட்ட பகுதி மிகவும் சேதம் அடைந்து உடையும் நிலையில் பள்ளமாக இருக்கிறது.
தஞ்சாவூர் மாநகராட்சியின் முக்கிய பகுதியான இந்த இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் ஏதேனும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இந்த எளிய வேலையையாவது
உடனே சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.