மாநாடு 29 September 2022
திமுகவில் 15வது அமைப்பு உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இருந்த போதும் பல இடங்களில் தேர்தல் நடத்தப்படாமல் பொறுப்பாளர்களை நியமனம் செய்த நிகழ்வு நடைபெற்றது.
திமுக உட்கட்சித் தேர்தலில் இறுதியாக மாவட்டச் செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
72 மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்வதற்காக நடைபெறுவதாக அறிவித்த அந்த தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் பொறுப்புகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் ஆட்களை நியமனம் செய்திருக்கிறார்களாம். இதில் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவில் உண்மையாக உழைத்த பலருக்கும் திமுக தற்போது துரோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது அதனால் தான் பல இடங்களிலும் குழப்பங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் திமுக வெளியில் பலமாக தெரிந்தாலும் உள்ளுக்குள் பலம் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது திமுகவில் இருக்கும் மாவட்ட செயலாளர்களில் பலரும் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் ஏறக்குறைய 25% விழுக்காட்டினார் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள்.
அதன் பட்டியல் பின்வருமாறு:
சென்னை கிழக்கு- சேகர்பாபு அ.இ.அ.தி.மு.க,
திருவண்ணாமலை தெற்கு-எ.வ.வேலு அ.இ.அ.தி.மு.க
தருமபுரி மேற்கு- பழனியப்பன் அ.இ.அ.தி.மு.க
ஈரோடு தெற்கு- முத்துசாமி அ.இ.அ.தி.மு.க,
சேலம் மேற்கு – செல்வகணபதி அ.இ.அ.தி.மு.க,
கரூர் செந்தில் பாலாஜி அ.இ.அ.தி.மு. க,
தேனி தெற்கு -ராமகிருஷ்ணன் ம.தி.மு.க,
தேனி வடக்கு தங்க தமிழ்செல்வன் அ.இ.அ.தி.மு.க,
விருதுநகர் தெற்கு kkssr அ.இ.அ.தி.மு.க,
மதுரை தெற்கு – மு மணிமாறன் சேடபட்டி முத்தையா மகன் அ.இ.அ.தி.மு.க,
புதுக்கோட்டை தெற்கு – ரகுபதி அ.இ.அ.தி.மு.க
தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன் ,
திண்டுக்கள் கிழக்கு செந்தில்குமார் (ஐ பி மகன் மதிமுக, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது திமுக தலைமை.சொந்த கட்சியில் ஒரு நபரை உருவாக்கி பொறுப்பு வழங்காமல் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தந்திருப்பதால் கட்சிக்காக உழைத்தவர்கள் சோர்வடைந்துள்ளனர். இதன் பிரதிபலிப்பு அடுத்து நடைபெறுகின்ற பொது தேர்தல்களில் வெளிப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
செய்தி; சதிஷ்.