மாநாடு 05 November 2022
தமிழுக்காக உழைத்தவருக்கு தஞ்சாவூரில் புகழ் வணக்க கூட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் மொழி ,தமிழர் மெய்யியல் ஆய்வறிஞர் முனைவர் நெடுஞ்செழியன் மறைவிற்கு தஞ்சையில் இரங்கல் கூட்டம்.தமிழகத்தில் ஆசீவகம், தமிழர் மெய்யியல் , உலகாய்தம் என பல தமிழ் நூல்களை, இலக்கியங்களை ஆராய்ந்து அரிய நூல்களைப் படைத்த தமிழறிஞர், தமிழ் மொழியின் பெருமையை, தொன்மையை எழுதியதற்கும், பேசியதற்கும் கர்நாடக சிறையிலே கடும் தண்டனைகளை அனுபவித்தவர், மார்க்சிய ,பெரியாரிய சிந்தனையாளர், எழுத்தாளர்,முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் மறைவிற்கு தஞ்சாவூரில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது . இன்று மாலை 5 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடி முன்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்திற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாவரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தாமரை இலக்கிய இதழ் ஆசிரியருமான சி.மகேந்திரன் நெடுஞ்செழியன் அவர்களைப் பற்றிய நினைவுகளை புகழ்ந்து, போற்றி அஞ்சலி உரையாற்றினார். இரங்கல் கூட்ட நிகழ்வில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர். பிரபாகரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என்.குருசாமி, கரிகாலன், தஞ்சை இலக்கிய வட்டம் ஒருங்கிணைப்பாளர் செ.சண்முகசுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ். எம்.ஜெய்னூல் ஆப்தீன்,மக்கள் கண்கணிப்பகம் மாவட்ட நிர்வாகிகள் எம். விக்டர், மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கோ.ஜெயசங்கர், நிர்வாகிகள் டி.தமிழ் முதல்வன், சிவா, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆர். முகிலன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா,துணைத்தலைவர் ஆர். பி.முத்துக்குமரன், தமிழ் ஆர்வலர் டி.அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முனைவர் க.நெடுஞ்செழியன் திருஉருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.