Spread the love

மாநாடு 7 April 2022

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் ராமலிங்கம். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து வரும் வெள்ளையம்மாள் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமலிங்கத்தின் இளைய மகனான 15 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற போது வெள்ளையம்மாள் மற்றும் அவரது ஆண் நண்பரான பச்சைமுத்து உள்ளிட்ட இருவரும் இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டனர். இதனை ராமலிங்கத்தின் மகன் தனது தந்தையிடம் கூறிய நிலையில், இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தை திருப்பி தருமாறு வெள்ளையம்மாளிடம் சென்று கேட்டுள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் தகராறு நிகழ்ந்துள்ளது. இதனால் ஆவேசமடைந்த பச்சைமுத்து கடனை திருப்பி கேட்டால் கொடுக்காமல் இருந்துவிட்டு எங்களிடமே தகராறு செய்கிறாயா என திட்டி ராமலிங்கத்தை அரிவாளால் வெட்ட சென்றிருக்கிறார்.

அப்போது அருகிலிருந்த ராமலிங்கத்தின் இளையமகன் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததுள்ளது. அத்துடன் பலத்த காயமடைந்த சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சமுத்துவை கைது செய்து சிறையில் அளித்துள்ளதாக தெரியவருகிறது.

29240cookie-checkகடன் பிரச்சனையால் சிறுவன் வெட்டிக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!