மாநாடு 16 July 2024
தஞ்சாவூரில் உள்ள இந்த வீரமாகாளி கோயிலில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் பூசை செய்ய பூசாரி வருவாராம் அதேபோல இன்று செவ்வாய்க்கிழமை பூசை செய்ய கோயிலுக்கு வந்த பூசாரிக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம் கோயில் உண்டியல் காணாமல் போயிருந்ததே அதிர்ச்சிக்கு காரணமாம் எங்கு என்ன நடந்தது என்பதை அறிவோம்.
தஞ்சாவூர் மாநகர் பகுதியில் உள்ள கருந்தட்டாங்குடி பூக்குளம் காசி பண்டிதர் குளத்தெருவில் இருக்கும் வீரமாகாளி கோயிலில் இருந்த உண்டியலை காணவில்லை என்று தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்திருக்கிறார்கள்.
கோயிலில் இருந்த உண்டியலை களவாடிச் சென்ற கயவர்களை கண்டுபிடித்து கைது செய்து தண்டிக்க தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய காவலர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
743470cookie-checkதஞ்சாவூர் வீரமாகாளி கோயிலில் திருட்டு