மாநாடு 22 March 2022
விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் கூறியிருப்பதாவது:
நானும் விருதுநகர் மேலத்தெருவில் வசித்து வந்த ஹரிஹரன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று, அங்குள்ள பெத்தநாட்சி நகர் மருந்து கிடங்கிற்கு என்னை அழைத்து சென்ற ஹரிஹரன், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். நாங்கள் தனிமையில் இருந்ததை அவர் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
இந்த விஷயம் எனக்கு சில நாட்கள் கழித்து தான் தெரியவந்தது.அவரிடம் வீடியோ குறித்து கேட்டேன் அதனை அழித்து விடுங்கள் என்றேன்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தார் நான் அழைக்கும்போதெல்லாம் என்னுடன் உல்லாசமாக இருக்க நீ வர வேண்டும்.வரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் ஹரிஹரன் என்னை உண்மையாக காதலிக்கவில்லை என்ற விஷயம் புரியவந்தது மனதளவில் துடித்துக்கொண்டு இருந்த நிலையில், எனக்கு தொடர்பு கொண்டு மிரட்டி என்னை தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.இந்த வீடியோவை அவரின் நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கும் பகிர்ந்து இருக்கிறார்.
இதனை சாதமாக்கிக்கொண்ட அவனது நண்பர்களும் வீடியோவை காண்பித்து மிரட்டினார்கள். மாடசாமி எனது வீட்டிற்கே வந்து தாயிடம் வீடியோவை காண்பித்து என்னிடம் அத்துமீறினான். அதனைப்போல, மாரி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, அகமது ஆகியோரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவர்களின் மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னை காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாண்டியன் நகர் காவல் துறையினர், இளம்பெண்ணின் காதலனாக நடித்து ஏமாற்றிய ஹரிஹரன் 27, காதலனின் நண்பர்கள் என 18 வயதுக்கு கீழ் இருக்கும் 4 சிறுவர்கள், ஜுனத் அகமது 27, பிரவீன் 22,மாடசாமி 37 ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் ஹரிஹரன் மற்றும் ஜுனத் ஆகியோர் திமுக கட்சியின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.