Spread the love

மாநாடு 29 May 2026

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகே தெற்கு வீதியில் ஒன்றரை மாதங்களாக சாலையில் ஆறாக ஓடி வீணான குடிநீர், ‘மாநாடு’ செய்தி மற்றும் YouTube காணொளி வெளியான மறுநாளே நிறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 26, 2026 அன்று ‘மாநாடு’ இணையதளம் மற்றும் YouTube சேனலில், “சித்திரை திருவிழா நடைபெறும் போது , தேரோட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம், இந்த சமயத்தில் பெரிய கோயில் அருகே சாலையில் ஓடி வீணாகிறது குடிநீர் என்பதை சுட்டிக்காட்டி “அந்தப் பக்கம் தேரோட்டம் ” ‘இந்த பக்கம் நீரோட்டம் ! என்ற தலைப்பில் மக்களின் பேட்டியுடன் செய்தி வெளியானது. 

நிக்கல்சன் வங்கி எதிரில் குடிநீர் குழாய் உடைப்பால் தினமும் மாலை 3.30 முதல் இரவு 9.30 வரை ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவதாக , புகார் தெரிவித்தும் சரி செய்யவில்லை என்று சொன்னார் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் பிரகாஷ் ராமலிங்கம் .

சட்டம் என்ன சொல்கிறது? இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 குடிநீரை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாக உறுதி செய்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1998-ன் படி, குடிநீர் விநியோகம் மற்றும் பொது சாலைகளை முறையாக பராமரிப்பது மாநகராட்சியின் கடமை. 45 நாட்கள் குடிநீரை வீணடித்தது அப்பட்டமான கடமை தவறுதல் ஆகும்.

செய்தி வெளியான ஏப்ரல் 27-ம் தேதியே தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் களமிறங்கியது. 45 நாட்களாக தீர்வு காணப்படாத பிரச்சனைக்கு 24 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. குடிநீர் வீணாவது உடனடியாக நிறுத்தப்பட்டு, சீரமைக்கும் பணி தொடங்கியது.

‘மாநாடு’ மே 3, 2026 அன்று நடத்திய கள ஆய்வில், முன்பு ‘NO ENTRY FINE 500’ போர்டு அருகிலேயே தண்ணீர் தேங்கி நின்ற இடம் முழுமையாக காய்ந்து காணப்பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, “குடிநீர் பிரதான குழாய் சீர் செய்யும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லவும்” என அறிவிப்பு பலகை இருந்தது. சாலை தோண்டப்பட்டு, பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தப் பணிக்காக தோண்டப்பட்ட சாலை பாதி இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்தப் பகுதி பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோர் பயன்படுத்தும் மிக முக்கிய சாலையாகும். ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்றால் கூட தற்போது மிகவும் கடினமாக உள்ளது. முழு சாலை நன்றாக இருந்தாலே காலை, மாலை என பல நேரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதி இது. தற்போது பாதி சாலையில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இது எந்த அதிகாரிகளின் கவனத்திற்கும் வரவே இல்லையா . இங்கு தோண்டப்பட்ட சாலையை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். நீண்ட நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால், மீண்டும் ‘மாநாடு’ செய்தி குழுமம் களத்தில் இறங்கி செய்தி வெளியிடும் மக்களுக்காக ..

“45 நாள் கிடப்பில் போட்ட பிரச்சனையை ‘மாநாடு’ செய்தி போட்ட 24 மணி நேரத்துல முடிச்சு கொடுத்தாங்க. சித்திரை திருவிழா முடிஞ்சாலும், இனி வர்ற நாட்கள்லயும் தண்ணீர் வீணாகாம இருந்தா போதும். செய்தியின் வலிமை இதுதான்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் .

தேரோட்டம் நடைபெற்ற முக்கிய ராஜ வீதியில் மீண்டும் குடிநீர் வீணாகாமல் இருக்கவும், சீரமைப்பு பணிகள் தரமாகவும் விரைவாகவும் முடிக்கப்படவும் ‘மாநாடு’ தொடர்ந்து கண்காணிக்கும்.

‘மாநாடு’ இதழின் இந்த செய்தி உட்பட நமது அனைத்து முந்தைய செய்திகள், YouTube காணொளிகள் மற்றும் சிறப்பு கட்டுரைகளை காண, புத்தகத்தின் ‘உங்களோடு நான்’ பக்கத்தில் உள்ள QR கோடை உங்கள் மொபைலில் Google Camera அல்லது QR Scanner மூலம் ஸ்கேன் செய்து பார்க்கலாம், படிக்கலாம்
91640cookie-checkமாநாடு செய்தி எதிரொலி: 45 வீணான குடிநீர்- 24 மணி நேரத்தில் நிறுத்தம்

Leave a Reply

error: Content is protected !!