Spread the love

மாநாடு 18 July 2026

ஈரான் நாட்டு மீதான கொலை வெறி தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்! இடதுசாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஈரான் அதிபர் கொமெய்னி வீரவணக்க நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகளில் தனது அதிகாரத்தை நிறுவுதல், அடிமைப் படுத்துதல், இயற்கை வளங்களை, எண்ணெய் வளங்களை கொள்ளை அடித்தல் உள்ளிட்ட அடாவடி நடவடிக்கைகளையும், ஈரான் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க

தன் நாட்டின் மீதான தாக்குதலையும் உறுதியாக எதிர்த்து போராடிய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி, அமெரிக்காவின் குண்டு வீச்சால் பலியான ஈரான் நாட்டின் உமர் முக்தார் அதிபர் அயத்துல்லா அலி கொமெய்னி மறைவிற்கு தஞ்சாவூரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இன்று 18/7/26 காலை 11 மணிக்கு தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப் பாளர் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமெரிக்கா அரபு நாடுகளில் எண்ணெய் வளத்தை குறிவைத்து அந்த நாடுகளின் மீது போர் தொடுத்து தனது அதிகாரத் திற்குள் வைத்துள்ளது.

மேலும் வெனிசுலாவின் இயற்கை வளத்திற்காகவும் அந்த நாட்டு அதிபர் மதுரோவையும், அவரது துணைவியாரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திரத்தை தொடர்ந்து எதிர்த்து வந்த கியூபா நாட்டு மீது பொருளாதாரத் தடை விதித்து அந்த மக்களை பாதிப்படைய செய்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்த லிபியா அதிபர் கடாபி, ஈராக் அதிபர் சதாம் உசேன் வரிசையில் அமெரிக்காவை எதிர்த்த ஈரான் நாட்டு அதிபர் கொமெய்னி யையும் அமெரிக்கா கொன்று உள்ளது. தொடர்ந்து அந்த நாட்டை மக்களை கொண்டு வீசி பழிவாங்கி வருகிறது. உடனடியாக ஈரான் நாட்டின் மீது நடத்தி கொலை வெறி தாக்குதலை அமெரிக்கா நிறுத்த வேண்டும், அமைதியை விரும்பும் உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது, போரை நிறுத்த ஐநா சபையும் முன் வரவேண்டும்,

அதே நேரத்தில் உலக மக்களுக்கும், சர்வதேச அமைதிக்கும் எதிரான அமெரிக்க ஏகாதிபத்தி யத்துடன் அரசியல் உறவுகளையும், பொருளாதார உறவுகளையும் இந்திய ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். இந்திய நாட்டின் விவசாயி களுக்கும், மக்களுக்கும் எதிரான அமெரிக்க வணிக ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் கொமெய்னி வீரவணக்க நிகழ்ச்சியில் வலியுறுத்தப் பட்டது.

நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரத்தின் மூத்த தலைவர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஐஎம் மாநகர செயலாளர் எம்.வடிவேலன், சிபிஐ எம் எல் லிபரேசன் மாநகர செயலாளர் எஸ்.எம். இராஜேந்திரன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் வே.உமாபதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தின், எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட துணை தலைவர் ஜகாங்கீர்பாட்சா, எழுத்தாளர் சாம்பான், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி செல்வம், பாரதி புத்தக நிலைய நிர்வாகி கோதண்டபாணி, என்டிஎல்எப் மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமணன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

93420cookie-checkதஞ்சையில் நடைபெற்ற ஈரான் அதிபர் கொமெய்னி வீரவணக்க நிகழ்வு

Leave a Reply

error: Content is protected !!