Spread the love

மாநாடு July 2026 News

100 ஆண்டு காலப் பழமையான கோயில் பாரம்பரியத்தை சீர் குலைப்பதாக மனு. திப்பன்விடுதி கிராம மக்கள் RDO-விடம் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் புகார்..!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டம், திப்பன்விடுதி கிராமத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையுத்தரவை மீறி, குறிப்பிட்ட கரை தலைப்புதாரிகள் மற்றும் பங்காளிகளை சமூகப் புறக்கணிப்பு செய்து, தாக்குதல் நடத்திய நபர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO) அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகளுடன் கிராம மக்கள் இறுதிப் புகார் மனுவை அளித்துள்ளனர். திப்பன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த 3-ஆம் கரை தலைப்புதாரி மு.பழனிவேல் தேவர் மற்றும் 8-ஆம் கரை தலைப்புதாரி துரை.முருகேசன் கோனார் ஆகியோர் ஊர் பொதுமக்கள் சார்பாக அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நூற்றாண்டு காலப் பாரம்பரியமும்,

26.03.1987-ஆம் ஆண்டு ஏற்படுத்திய வரலாற்று ஒப்பந்தமும்: திப்பன்விடுதி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாட்டன்முடையார் கோவிலில் பாரம்பரியமாக கள்ளர் சமுதாயத்திற்கு 4 கரைகளும், யாதவர் சமுதாயத்திற்கு 4 கரைகளும் உள்ளன. கடந்த 24.04.1998 அன்றே திப்பன்விடுதி கிராமத்தினர் ஒருமனதாக போடப்பட்ட 10 ரூபாய் முத்திரைத் தாள் உடன்படிக்கையின் படி (உரிமம் எண்: 19, 1897), இரு சமுதாயத்தைச் சேர்ந்த 8 கரைகளின் பங்காளிகளும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக கிராமப் பொதுக் காரியங்களை நடத்த வேண்டும் என விதிகள் உள்ளன. வம்சாவழியாக தங்ககருப்பையா தொண்டைமான் குடும்பத்தினர் ‘கரும்பு கிடா’ வெட்டுவதற்கு அருள்மிகு கருப்பசாமி யிடமிருந்து அரிவாள் எடுத்து பூசாரியிடம் கொடுக்கும் வழிபாட்டு வழக்கமுறையை செய்துவருகின்றனர்.

1-ஆம் கரை தலைப்புதாரி மற்றும் போலீஸ் அதிகாரி அழகு (எ) திருநாவுக்கரசுவின் ஆதிக்கம்: தற்போது சென்னை திருவல்லிக்கேணி சரகம் காவல் நிலையத்தில் ACP/DSP அந்தஸ்தில் பணியாற்றி வரும் உயர் போலீஸ் அதிகாரியான ரெங்கசாமி தேவர் மகன் அழகு (எ) திருநாவுக்கரசு என்பவரின் தூண்டுதலின் பேரில், கிராமத்தைச் சேர்ந்த அ.குமார் (எ) செல்வகுமார், செந்தில் (எ) கருப்பையன், சோலையன், வேம்பையன், கண்ணன் (எ) மாரிக்கண்ணன், கோ.பழனிவேல் கோனார், ரெ.ரவி கேனார் உள்ளிட்ட 8 நபர்கள் கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கின்றனர். 2023 முதல் தொடரும் சமூகப் புறக்கணிப்பு – நிதி முறைகேடு: இந்த அதிகார பலத்தை கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்தே மனுதாரர்களின் குடும்பங்களையும், தங்ககருப்பையா தொண்டைமான் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த வைகாசி விசாகத் திருவிழாவைத் தன்னிச்சையாக நடத்தி ( 8 கரை தலைப்புதாரிகள் ஒன்றிணைந்து நடத்தவேண்டிய அனைத்து கிராம பொது நிகழ்வுகளையும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துவரும் முறையான வரவு செலவு கணக்கு தணிக்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போராடும் 3-ஆம் மற்றும் 8-ஆம் கரை தலைப்புதாரிகளை ஒதுக்கிவிட்டு), முறையான ரசீது இல்லாமல் மக்களிடம் குடிவரி வசூலித்து, அதற்குரிய வரவு-செலவு கணக்குகளை காட்டாமல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை முறைபடுத்தவேண்டுமென்று கேட்டதாலும், ஒரத்தநாடு உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாலும் 23.4.2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளன்று ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்த 3-ஆம் கரை தலைப்புதாரி திரு.மு.பழனிவேல் தேவரின் இரு மகன்கள் மற்றும் மனுதாரரின் மனைவியையும் எதிர்மனுதாரர்கள் வாக்களிக்கவிடாமல் தடுத்தது மற்றும் மனுதாரரின் மகன்கள் மற்றும் மனைவி வாக்களித்த பின் அவர்கள் மூவரையும் கிராம மக்கள் முன்னிலையில் பொது இடத்தில் வழிமறித்து கொலைவெறியுடன் தாக்கப்பட்ட தும் மிகவும் கொடூரமான செயல்கள். மனுதாரர்களின் குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி, தினமும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு மீறல் மற்றும் கிரிமினல் வழக்கு (குற்ற எண்: 378/2024 , 96/2026 & 99/2026): எதிர்மனுதாரர்களின் இந்த அடாவடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது எனத் தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது [WP(MD)No: 28127/2023] (சான்று ஆவணம் 1).ஆனால், இந்த உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எதிர்மனுதாரர்கள் கோவிலில் தகராறு செய்து, மனுதாரர்கள் ஆதரவு அளித்த திருமதி.சந்திரா என்ற பெண்ணை தாக்கிய தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மீது குற்ற எண்: 378/2024-இன் கீழ் காவல் துறையினரால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதால் அவர்கள் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் (Contempt of Court) தற்போது நிலுவையில் உள்ளன (சான்று ஆவணம் 2, 3).கோட்டாட்சியரிடம் அவசர கோரிக்கை: தற்போது ஒரத்தநாடு நீதிமன்றத்தில் வழக்கு எண் OS4/2026 நிலுவையில் இருக்கும் போதே, பழைய ஊர் ஒப்பந்தங்கள் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் மணவாசல் திடலில் தன்னிச்சையாக பொங்கல் மற்றும் மாடு விடும் விழாவை கடந்த 16 & 17 ஜனவரி 2026 மாட்டுப்பொங்கல் விழாவையும் அராஜக போக்குடன் நடத்தினார்கள்.

மேலும் எதிர் மனுதாரர்கள் கடந்த 7,8,9 ஜுன் 2026 தேதிகளில் வைகாசி விசாக திருவிழைவையும் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எங்களை ஒதுக்கிவைத்துவிட்டு நடத்தினார்கள். வருகிற ஆடி 18 -ஆம் நாள் கரை வாரியாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழாவையும் எங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் நடத்தும் தனிப்பட்ட சுப, துக்க மற்றும் சடங்குகளுக்கும் எங்கள் குடும்பங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கக்கூடாது மேலும் எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு கிராமத்தினரை நாங்கள் அழைத்தாலும் மேற்கூறிய நபர்கள் கிராமத்தினரை நேராகவோ , போன் மூலமாக மிரட்டி எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரக்கூடாது என தடுத்துவிடுகிறார்கள்.

இது இந்நாள் வரை தொடர்ந்து மிரட்டப்படுகிறார்கள், இதனால் கிராமத்திர்களும் பயத்தில் உள்ளார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு திரு. அழகு உள்ளிட்ட எதிர்மனுதாரர்களை விசாரணைக்கு உட்படுத்தி, அனைத்துத் தரப்பையும் ஒருங்கிணைத்து சுமூகமாக முன்னோர்கள் வழிமுறைப்படி விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை: 30 ஆண்டுகால முத்திரைத் தாள் ஒப்பந்தம், உயர்நீதிமன்ற உத்தரவு நகல்கள் [WP 28127/2023] & [ W.P.Crl (MD) 94 of 2025 & W.P.M.P.Crl ( MD) 8 of 2026] மற்றும் கிரிமினல் வழக்கு [குற்ற எண் 378/2024, 96/2026 & 99/2026] உள்ளிட்ட வலுவான ஆதாரங்களுடன் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், பட்டுக்கோட்டை வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் எந்த அமைதிப்பேச்சுவார்த்தை

கூட்டத்திலும் எதிர்தரப்பினர்கள் உடன்படவில்லை மேலும் பாதியிலேயே வெளியேறிவிடுவது அவர்களின் வழக்கமான செயல்பாடாக உள்ளது. இதனால் எவ்வித ஒருமித்த தீர்வும் இதுவரை எழவில்லை.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை வெடிக்காமல் தடுக்க இருதரப்பையும் உடனடியாக அழைத்து அமைதிக் பேச்சுவார்த்தை நடத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரடி தலைமையில் நடத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண வேண்டுமென்று மனுதாரர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

-அருள்

93370cookie-check100 ஆண்டு காலப் பழமையான கோயில் பாரம்பரியத்தை சீர் குலைப்பதாக மன

Leave a Reply

error: Content is protected !!