Spread the love

மாநாடு July 2026 News

அரசு சம்பளத்தை மட்டுமே நம்பி நேர்மையாக பணியாற்றும் அரசு ஊழியர் தனது பனிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் போது நமக்கு கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் குடும்பத்தினரோடு எஞ்சிய காலங்களில் நிம்மதியாக மானம், மரியாதையோடு அனைத்து கடமையும் செய்து வாழ வேண்டும் என்று கண்ணியமாக பணிக்காலங்களில் நடந்து கொள்வார்கள்.

ஆனால் தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் கார்த்திகேயன் இதனை எல்லாம் மீறி எவ்வித பதற்றமும் பயமும் இல்லாமல் பத்திரிக்கை ஆசிரியரை தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி மிரட்டுகிறார் . பத்திரிக்கை தொழில் செய்ய முடியாத அளவுக்கு கேவலப்படுத்தி உயிர் அச்சுறுத்தல் கொடுக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார் இது மட்டுமல்லாமல் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஏமாற்றிய புகாரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டரையே அச்சுறுத்துகிறார் என்றால் இதிலிருந்து தெரிவது “சம்பள பணத்தை, பணி ஓய்வின்போது கிடைக்கும் பணத்தை மட்டும் இவர் நம்பி இருக்க வாய்ப்பே இல்லை” அதை விடவும் பல கோடிகள் நம்மிடம் இருக்கிறது நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற ஆணவப்போக்கில் ஆட்டம் காட்டம் இவரின் அடாவடி போக்கை குறிப்பிட்டு கார்த்திகேயன் மீது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு | புலனாய்வு மாத இதழின் ஆசிரியர் ஆகிய நான் புகார் அளித்தேன் அதன் விபரம் பின்வருமாறு :

“எனது உயிருக்கோ உடைமைக்கோ என்ன ஆபத்து நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பு தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளராக இருந்து, தற்போது பண்ருட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் உதவி பொறியாளர் கார்த்திகேயன் தான்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சந்தித்து புகார் அளித்த பத்திரிகையாளருக்கு, தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யாமல், சமுதாய பணி பதிவேடு (CSR) ரசீது மட்டும் வழங்கியுள்ளனர். இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 175(3)-ன் கீழ் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

‘அரசியல் மாநாடு’ இதழின் ஆசிரியராகிய நான் கடந்த 10-06-2026 அன்று தஞ்சை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து அவரின் கையில் கொடுத்த புகார் மனுவில், “மாநாடு செய்தி குழுமத்தில் பல அதிரடி செய்திகளை எவ்வித அச்சமின்றி வெளியிட்டு வருகிறேன், அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த பல்வேறு திடுக்கிடும் மோசடிகளையும், தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்கள் படும் பாடுகளையும் தொடர்ந்து ராம்குமார் ஆகிய நான் வெளிப்படுத்தி வருவதால், என் மீது வன்மம் கொண்ட தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் கார்த்திகேயன், சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும், மேலும் கும்பலாக சேர்ந்து கொண்டு ஆட்களை வைத்து, சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் பணத்தை செலவு செய்து, என்னையும் எனது பத்திரிகை தொழிலையும் அழிக்க திட்டமிட்டு, மிகவும் கீழ்த்தரமாக, நல்ல குடும்பத்தில் பிறந்த யாரும் செய்யத் துணியாத விதத்தில், ‘இவன் பிச்சைக்காரன், பிச்சை எடுக்கிறான், என்று மேலும் மிகக் கேவலமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் போட்டு , துணிச்சலாக தொடர்ச்சியாக பரப்பும் கார்த்திகேயன் என்பவரால் எனது “உயிருக்கு அச்சுறுத்தல்” உள்ளது.

இவரால் சமூகத்தில் தலைநிமிர்ந்து நான் நடக்க முடியவில்லை, மானம் போகிறது. எனது தொழிலிலும் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

இந்த புகார் மனு எஸ்.பி. அலுவலக பார்வை N.Ref No.G4/9008/255/2026 மற்றும் C.NO 286/SP-GDP/SDO-TT/2026 மற்றும் C.NO 53/SP-GDP/B1PS/2026 குறிப்பிட்டு கிழக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. விசாரணைக்கு புகார்தாரரான என்னை மட்டும் அழைத்தார்கள். ஆனால் எதிர்மனுதாரரான கார்த்திகேயனை விசாரிக்க அழைத்தார்களா ? என்று தெரியவில்லை.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் எனக்கு அளித்த பதில் கடிதத்தில், “அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை பெறப்பட்டதில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை” என்று கூறி, CSR No: 0438/2026, நாள்: 25-06-2026 என்று தேதியிட்ட ரசீதை 1-7-2026 அன்று வழங்கி, “உரிய நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளவும்” என்று தெரிவித்துள்ளார். இதுவரை FIR பதிவு செய்யப்படவில்லை.

இது உச்சநீதிமன்ற தீர்ப்பை விட லீகல் ஒப்பினியன் தான் பெரியது என்று சொல்லாமல் சொல்லி, நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்த செயலாகும். புகாரில் கூறப்பட்டுள்ள எதிர்மனுதாரரான தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் கார்த்திகேயன் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை 02/2020 மற்றும் 08/2025 என இரண்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

மேலும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு அவர் மீது மற்றொரு வழக்கு பதியப்பட்டது . அது அனைத்து செய்தி ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2014-ம் ஆண்டு ‘லலிதா குமாரி எதிர் உத்தரபிரதேச அரசு’ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் 120-வது பத்தி சொல்கிறது: “Cognizable குற்றம் பற்றிய தகவல் கிடைத்தால், காவல் அதிகாரி FIR பதிவு செய்வது கட்டாயம். முதற்கட்ட விசாரணை, சட்டக் கருத்துரை கேட்பது என காலம் தாழ்த்தக்கூடாது.

” எனது புகாரில் உள்ள “உயிருக்கு ஆபத்து” என்பது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 351(3) – கொலை மிரட்டல் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய Cognizable குற்றமாகும். BNS பிரிவு 351(4) பெயர் மறைத்து மிரட்டல் என்பது ஆன்லைன் Fake ID-களுக்கு பொருந்தும். BNS பிரிவு 61(2) கூட்டு சதி என்பது ஆட்களை ஏவி விட்டு செய்வதால் பொருந்தும். BNS பிரிவு 356(3) அவதூறு குற்றத்தை குறிக்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66D ஆள்மாறாட்டம் குற்றத்தையும் குறிக்கிறது. BNSS பிரிவு 173(1)-ன் படி இதற்கு உடனடியாக FIR பதிவு செய்வது காவல்துறையின் சட்டப்படியான கடமை ஆகும். அரசியல் மாநாடு இதழின் ஆசிரியராகிய நான், பத்திரிகை தொழில் செய்ய முடியாத அளவுக்கு அவமானப்படுத்தி, தொழிலை நட்டப்படுத்தி உள்ளார் கார்த்திகேயன்.

2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த அராஜக கிரிமினல் வேலையை இவர் தான் செய்து வருகிறார் என்பதற்கு சான்றாக 2023 தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் தபால் மூலம் என் மீது போலி பத்திரிகையாளர் என்று ஒரு புகார் கடிதம் வந்ததாக என்னை அழைத்து விசாரித்தார் அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரா. அந்தப் புகார் வந்ததாக காட்டிய கடிதத்தில் எந்த முழு முகவரியும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

அதில் என்ன வாக்கியம் போட்டிருந்ததோ அதே தான் ஒவ்வொரு முறை அவதூறு பரப்பி என்னை அசிங்கப்படுத்தி என் பத்திரிக்கை தொழிலை முடக்க சமூக வலைத்தளங்களில், பொதுத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சித்தரிப்புகளிலும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது அதற்கும் மூல காரணமாக தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் தான் இருந்திருக்கிறார் என்பது தற்போதைய நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் அனைத்து கதவுகளையும் நான் தட்டுவேன் ஆனால் ஒரு சாமானியன் எப்படி நீதிமன்றம் போய் அலைய முடியும்? குற்றம் நடப்பதற்கு முன்பு தடுப்பதுதான் காவல்துறையின் கடமை. எதிர்மனுதாரர் கார்த்திகேயன் அரசு அதிகாரி என்பதால் அரசு வழக்கறிஞரிடம் சட்டக் கருத்துரை கேட்டது ‘Conflict of Interest’ ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி லீகல் ஒப்பினியன் கேட்டு FIR மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971-ன் கீழ் வரும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் போலீஸ் FIR போட மறுத்ததால், பாதிக்கப்பட்டவர் தரப்பில் BNSS பிரிவு 175(3)-ன் படி நேரடியாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது சம்பந்தமாக ஏற்கனவே கார்த்திகேயன் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் உறுதியாக ஒன்றை பதிவு செய்கிறேன் “என் உயிருக்கும் உடமைக்கும் எந்த அசம்பாவிதம் நேர்ந்தாலும் அதற்கு முழு பொறுப்பு உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அவருக்கு அறனாக , ஆதரவாக செயல்பட்ட அனைவருமே தான்..

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை முதல்வரே…

பழைய ஆட்சியின் காட்சிகளை எல்லாம் பார்த்து, வெறுத்து மாற்றத்தை தேடிய மக்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு , மாற்றத்தை நம்பி வாக்களித்து முதல்வர் ஆக்கினார்கள்.

முதல்வரே சாமானிய மக்களுக்கு மாற்றம் கிடைக்குமா?

ஏமாற்றமே தொடருமா?…

ஆதாரம்: 1. மாவட்ட எஸ்.பி. அலுவலக பார்வை N.Ref No.G4/9008/255/2026, நாள்: 10-06-2026. 2. CSR No: 0438/2026, நாள்: 25-06-2026. 3. தஞ்சை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பதில் கடிதம்.

93200cookie-checkசுப்ரீம் கோர்ட் உத்தரவையே பின்பற்றாத தஞ்சை போலீஸ்

Leave a Reply

error: Content is protected !!