Spread the love

மாநாடு 31 March 2022

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிகுடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜெய் கலைச்செல்வன் (19) என்று ஒரு மகன் உள்ளார். அவர் திருவாரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருக்கும் இவரது பக்கத்து ஊரைச்சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 18 வயது பள்ளி மாணவிக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த பள்ளி மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த காரணத்தை அந்த மாணவியிடம் கேட்டபோது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார் தன்னை காதலித்த ஜெய் கலைச்செல்வன். இதன் காரணமாக நெருங்கி பழகினோம் அதனால் நான் கர்ப்பமாக உள்ளேன் என கூறினார்.

மேலும் அந்த பள்ளி மாணவி இந்த சம்பவம் குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது அந்த கல்லூரி மாணவன் ஜெய் கலைச்செல்வன் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

28081cookie-checkகாதலால் கர்ப்பமான திருமணமாகாத திருவாரூர் மாணவி

Leave a Reply

error: Content is protected !!