மாநாடு 19 April 2022
தலையில் அழுக்கோடு சொறிப்பிடித்து இருப்பவர்களை தலையில் இருக்கும் முடியை வெட்டி அழகுபடுத்தி சோப்பு போட்டு குளிப்பாட்டும் போது தனக்கு நல்லது தான் செய்கிறார்கள் என்பதை உணராத சில மனிதர்கள் சோப்பு போட்டதால் புண்கள் எரிகிறதே என்று சுத்தம் படுத்துபவரை குறைத்து பேசி திட்டுவது போல நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடிய நல்லவர்கள் நிறைந்திருந்த தஞ்சாவூரிலும் சமீபகாலமாக ஒரு நிகழ்வு நடந்து வருகிறது அது யாதெனில்.
தஞ்சாவூர் மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எழில்மிகு நகரமாக மாற்றக்கூடிய நகரங்களில் தஞ்சாவூர் நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சாலைகள்= போக்குவரத்துக்கள், நீர்நிலைகள். சுகாதாரங்கள் என அனைத்திலும் சரிவர முறைப்படுத்த வேண்டிய சூழல் தஞ்சாவூருக்கு உண்டானது.
அந்நேரத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த பட்டதாக கூறினாலும் கூட எதுவும் முறையாக செய்ய முடியாத நிலை இருந்தது. காரணம் தமிழ்நாட்டில் நகரங்கள் தோன்றியபோது முதலில் தோன்றிய நகரங்கள் சில மட்டும்தான் அதில் தஞ்சாவூர் நகரமும் ஒன்று இந்த நகரத்தில் பிற்காலத்தில் சாராயம் விற்பவரை சாமியாக பார்த்ததும் விவசாயம் செய்பவர்களை ஏமாளியாக பார்ப்பதும் அரசியல்வாதி என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்தவர்களையும் கரை வேட்டி கட்டிக்கொண்டு கடைகளைப் பல பிடித்து பூட்டி வைத்துக்கொண்டு இருப்பவர்களையும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக பார்த்து பழக்கப்பட்ட தஞ்சாவூர் மக்களுக்கு தற்போது தஞ்சாவூர் ஆணையராக இருக்கும் நேர்மை மிகு சரவணகுமாரின் செயல்கள் பொதுமக்களுக்கு பூரிப்பையும் அரசியல்வாதிகள் என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தவர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது.
ஆணையர் சரவணகுமார் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தவர்களிடம் இருந்து படாதபாடுபட்டு மீட்டெடுத்தார். வாடகையை தராமல் கடையை உள்வாடகைக்கு விட்டு தாங்கள் மட்டும் பிழைத்துக் கொண்டு நகராட்சி ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தஞ்சாவூரை நகராட்சியை வைத்திருந்தார்கள் அரசியல்வாதிகளும் ஆக்கிரமிப்பாளர்களும் அதையெல்லாம் சரி செய்வதற்காக ஆணையர் சரவணகுமார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் அதன்மூலம் பலராலும் பல வகையிலும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசின் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் அவ்வளவு சுலபமாக அந்த இடங்களை காலி செய்து விடவும் இல்லை ஆணையரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆரம்ப காலத்தில் சமுக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் ஏனெனில் இதற்கு முன்பு இவரைப்போன்ற நேர்மையான அதிகாரியை தஞ்சாவூர் மக்கள் பார்த்ததில்லை இல்லாதவர்கள் இடத்தில் தனது அதிகாரத்தை காட்டுவார்கள் இருப்பவர்கள் இடத்தில் அடக்கி வாசித்து அவர்களுக்கு தேவையானதை அவர்களுக்கு செய்து கொடுத்து இவர்களுக்கு தேவையானதை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் அதுபோன்ற அதிகாரியை பார்த்தவர்கள் இவரின் செயல்பாடுகளையும் சந்தேகப் பட்டதில் தவறு ஏதும் இல்லை. ஆணையரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் சமூக ஆர்வலர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக செயல்கள் மூலம் தான் யாருக்கும் எதற்கும் தலைவணங்காத நேர்மையாளர் என்பதை சொல்லாமல் செயல்கள் மூலம் செய்து காட்டினார். ஆணையர் சரவணக்குமார். அவரின் நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது ,சாலைகள் அகலப்படுத்தப்பட்டது, வருமானமே இல்லாத நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் அதிக வருமானம் ஈட்டி தமிழகத்தில் முன்மாதிரியான மாநகராட்சிகளில் ஒன்றாக திகழ்வதற்கு காரணம் ஆணையரின் அயராத உழைப்பு என்று சொன்னாள் மிகையாகாது.
மூக்கணாங்கயிறு இல்லாத காளையாக சுற்றித்திரிந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பை செலுத்தி இது அநியாயம் என்று தெரிந்தாலும் கூட அரசியல்வாதிகள் என்கிற மமதையில் மனம் போன போக்கில் நடந்து மக்களுக்கு இடையூறு கொடுத்தவர்களுக்கு ஆணையர் சரவணகுமார் மீது ஒருவித வெறுப்பு தோன்றியது என்பது மறுக்கமுடியாதது.அதனால் ஆரம்ப காலந்தொட்டே அவதூறுகளை அவர்மீது அள்ளி தெளித்த வண்ணம் இருந்தார்கள் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கெடுத்த தேனீர் விருந்தில் ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டதை வைத்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக தான் தஞ்சாவூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேலைகளில் முறைகேடுகள் நடப்பதாகவும்,அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஆணையர் சரவணகுமார் வருவதற்கு முன்பு ரயிலடி அருகே உள்ள கீழ் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் நின்று விடக்கூடாது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது,அப்போது உண்மையாக மக்கள் மேல் அக்கறை உள்ளவர்கள் சமூக ஆர்வலர்கள் இது மேம்பாலம் இல்லை மரண பாலமாக தான் இருக்கிறது உடனே இதை முறையாக கட்ட வேண்டும் என்று போராடினார்கள். ஆனால் இன்று பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று ஆணையர் மேல் குற்றம் சாட்டும் ஒருவர் கூட இந்த மேம்பாலத்தில் முறைகேடு நடந்து கொண்டிருக்கிறது என்று போராடவும் இல்லை போராடியவர்களுக்கு துணையாக வந்ததும் இல்லை. அப்படியாப்பட்ட நேர்மையாளர்கள் தான் இப்போது ஆணையரின் செயல்பாடுகள் மீது குற்றம் சாட்டுபவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆளுநரின் தேநீர் விருந்துக்கு ஆணையர் ஏன் சென்றார் என்பது தான் இவர்களின் கேள்வியாக உள்ளது. ஆணையர் சரவணகுமார் பெற்றோரை இழந்த ஏழை மாணவருக்கு மருத்துவ படிப்பிற்கு உதவி செய்து படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றாராம் அந்த மாணவர் பாரதியார் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கிறார் அதற்கு ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தில் பரிசு கொடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது தனக்கென்று உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறிய மாணவர் எனக்கு எல்லாமுமாக இருந்து படிக்கவைத்து உதவி வரும் நீங்கள் இந்நிகழ்விற்கு வரவேண்டும் என்று அழைத்திருக்கிறார் அதன்காரணமாக இவரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது.
உண்மை இப்படி இருக்க .ஆணையர் சரவணகுமாருக்கு எதிராக அவதூறுகளை அள்ளி வீசும் முயற்சியை விட்டுவிட்டு மக்களுக்கு தங்களால் முடிந்த நன்மையைச் செய்ய முடிந்தால் செய்ய வேண்டும் நல்லது செய்யவே தெரியாது என்றால் நல்லது செய்பவர்களுக்கு வழிவிட்டு வேடிக்கையாவது பார்க்க வேண்டும் என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது. ஆணையர் சரவணகுமாரை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்குபவர்கள் அவரை பார்த்தாவது எப்படியாவது நாம் மாற வேண்டும் என்று முயற்சி செய்தால் தங்களுக்கும் தஞ்சாவூருக்கும் நல்லது செய்வார்களா
செய்தி :க.இராம்குமார்
