Spread the love

மாநாடு 20 April 2022

காவல்துறை பணி என்பது எந்நேரமும் எல்லா மக்களுக்கும் செய்யப்படும் சேவை அந்த சேவையில் சிறு குளறுபடி ஏற்பட்டால் கூட மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக அமைந்துவிடும் இதை உணர்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் அத்துறையில் இருக்கிறார்கள்.அவர்களின் சிறந்த பணியை நமது மாநாடு இதழ் அவ்வபோது அவர்களின் சேவையை பாராட்டும் விதமாக செய்திகளும் வெளியிட்டிருக்கிறது.அதேபோல எங்கேனும் குறைகள் ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி அதை சரி செய்ய வேண்டியது ஊடகத்தின் அறம் அந்த நோக்கில்தான் இந்த செய்தியையும் வெளியிடுகிறது.

தஞ்சாவூரில் நகரத்தை இணைக்கும் பாலங்களும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது அதன் காரணமாக தஞ்சாவூரில் கடைத்தெருக்கள் இருக்கும் இடங்களிலும் நகரத்தை இணைக்கும் பகுதிகளின் வழியாகவும் சிறு வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்களை பொதுமக்கள் இயக்கி வருகிறார்கள்.அந்தந்த முக்கியமான பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்வதற்காக போக்குவரத்து காவலர்களையும் மாவட்ட நிர்வாகம் நிறுத்தி போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பொது மக்களுக்கு உதவியாக போக்குவரத்தை சரி செய்து கொடுக்கும் பணியை கொடுத்திருக்கிறது.

அப்படி இருந்தும் சில இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் சில போக்குவரத்து காவலர்களின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்று கீழவாசல் மார்க்கெட் பகுதியாகும் இந்தப் பகுதிகளில் அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் இருக்கிறார்கள், அருகில் வங்கிகள் இருக்கிறது, பள்ளிக்கூடங்கள் இருக்கிறது, தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பகுதியாகும்.

இவ்வாறு போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் உள்ள பகுதியில் போக்குவரத்து காவலர் இன்னுமும் பொறுப்புணர்ந்து போக்குவரத்தை சரி செய்யும் காவல் பணியில் ஈடுபடவில்லை என்றால் மக்கள் பாடு திண்டாட்டம்தான் என்பதை உணர்த்தும் விதமாக இன்று காலை

10.30மணிக்கு கீழவாசல் நடராஜா மளிகை கடைக்கு வெளியே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே மிஸ்டர் கோல்ட் என்று பொறிக்கப்பட்ட டேங்கர் லாரி ஒன்று ஓட்டுனர் கூட இல்லாமல் ஏறக்குறைய 20 நிமிடத்திற்கு மேலாக நின்றுகொண்டிருந்தது அதன் காரணமாக அந்த வழியாக வந்த எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நெடுந்தூரம் அணிவகுக்க ஆரம்பித்தது அந்த வழியாக பயணிகளை ஏற்றிவந்த அரசு பேருந்து உட்பட வரிசை கட்ட ஆரம்பித்தது இந்நிலையில் தான் போக்குவரத்தை சரி செய்யும் நோக்கோடு போக்குவரத்து காவலர் அந்த லாரியை அகற்றுவதற்காக லாரியை எட்டிப்பார்த்தார் ஆனால்

லாரியில் ஓட்டுனர் இல்லை லாரியில் சாவி இருந்தது உடனே வேறு விதமாக போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அந்த காவலர் ஈடுபடத் தொடங்கினார் ஆனால் இந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலான அந்த பகுதியில் லாரியை உள்ளே விட்டு இருக்கவே கூடாது அதுவும் காவலர் நிற்கும் பகுதிக்கு அருகிலேயே அந்த லாரியை நிறுத்த விட்டு இருக்கவும் கூடாது ஏன் போக்குவரத்து காவலர் அலட்சியமாக இருந்து பொதுமக்களை அல்லலுக்கு உண்டாக்கினார் என்பதை இவரின் மேலதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இடையூறு கொடுக்கும் வகையில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மை விளக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

மேலும் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சாந்தி கமலா திரையரங்கம் சாலையில் அமைந்திருக்கும் மோகன் ஷாப்பிங் என்கிற கடைக்கும் நேரம் காலம் இல்லாமல் பொருட்களை இறக்குவதற்காக பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுகிறது அதேபோல அதன் அருகிலுள்ள பர்மா பஜார் பிகே மருத்துவமனை சாலையில் சரக்குகளை இறக்க வரும் வாகனங்களும் நேரம் காலம் இல்லாமல் வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது இதனையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள். மேலதிகாரிகள் மேன்மையோடு செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

31540cookie-checkதஞ்சையில் போக்குவரத்து காவலரின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

Leave a Reply

error: Content is protected !!