Spread the love

மாநாடு 20 April 2022

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் பொருட்டு பல நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் மஞ்ச பை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறாக பல வழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தஞ்சாவூர் கீழவாசலில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொண்டதில் கீழவாசல் மாஸ் டிரேடர்ஸ் என்கிற கடையின் குடோனில் இருந்து ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆய்வு செய்ததில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவருகிறது .

அந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பொருட்களை ஆய்வுக்கு வந்திருந்த அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதே தீவிரத்தை பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலை நிறுவனத்திடமும் அரசுகள் காட்டினாள் மட்டுமே இதை தடை செய்ய முடியும் என்பதே எதார்த்தம். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

31612cookie-checkதஞ்சையில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!