மாநாடு 9 May 2022
இலங்கையில் தற்போது பதற்றமான நிலைமை நிலவுகிறது. இன்றைய தினம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இலங்கையிலுள்ள பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் கலவரம் இன்னும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கும் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த வாகனங்களின் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் எம்.பி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. தனது காரை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது எம்பி அமர கீர்த்தி அதுகோரல துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
