Spread the love

மாநாடு 11 May 2022

தேச துரோக வழக்கை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை யார் மீதும் தேசத்துரோக வழக்கு பதிய கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசவிரோத சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்டத்தை அடக்குவதற்காக தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 (A) உருவாக்கப்பட்டது.இந்த சட்டப்பிரிவு தற்போது வரை அமலில் உள்ள நிலையில் பழிவாங்கும் நோக்கம், அரசியல் காரணத்திற்காக அவை பயன்படுத்தப்படுகின்றது. அதனை நீக்க கோரி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் சார்பாக பொதுநல மனு உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் ஆலோசனைக் கேட்ட நிலையில் தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இல்லை எனில் அதில் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தகவல்கள் வருகிறது . இதன் காரணமாக மத்திய அரசின் மறுபரிசீலனையை 3 முதல் 4 வாரங்களில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தேச துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 (A) வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தற்காலிகமாக வழக்கு பதியக்கூடாது என மத்திய அரசுக்கும் ,மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் வைத்திருக்கும் 13 ஆயிரம் பேரையும் பிணையில் வெளியே விடலாம் என்றும் அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் பிணை கோரலாம் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

34500cookie-checkதேசத்துரோக வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

Leave a Reply

error: Content is protected !!