மாநாடு 23 May 2022
காவிரி டெல்டா பகுதிகளுக்கு பயன்பெறும் வகையில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதால் முன்கூட்டியே அதாவது மே மாதம் 24ஆம் தேதி நாளை மேட்டூர் அணையை திறக்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி சுதந்திரத்திற்குப் பிறகு மே மாதம் மேட்டூர் அணை திறப்பது இதுவே முதல் முறை மேலும் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகளில் இதுவரை 4 முறை மட்டுமே மே மாதம் திறக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல 88 ஆண்டுகளில் 18 முறை மட்டுமே குறிப்பிட்ட நாளான ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நாளை மே 24ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது .இதன் காரணமாக 12 மாவட்டங்கள் பயன்பெறும். ஏறக்குறைய 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது உண்மை.
ஆனால் பல ஆறுகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும் கோரைப் புற்கள் வளர்ந்து ஆறுகள் காடுகள் போல காட்சி அளிப்பதை அனைவருமே காணமுடியும். இருந்தபோதும் அவ்வப்போது ஆறுகளை தூர் வாருவதற்காக அரசுகளால் நிதிகள் ஒதுக்கப்படுகிறது .இருப்பினும் தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாக சரிவர பயன்படுத்தி அந்த வேலையை முடிக்க வில்லை என்பதை நம் ஊர் ஆறுகளை பார்த்தாலே அறிய முடியும். நிலை அப்படி இருக்க நாளை மேட்டூர் அணையில் திறக்கும் தண்ணீர்
இந்த ஆண்டாவது கடைமடை பகுதியான நாகைக்கு தண்ணீர் சென்று விவசாயம் செழிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
அதிகாரத்தில் உள்ளவர்களும், அரசியல்வாதிகளும் நிதிகள் ஒதுக்குவதை பதுக்காமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/zh-TC/register-person?ref=WTOZ531Y