மாநாடு 8 June 2022
சேலம் மாவட்டம் கூடமலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், நந்தினி ,ரோஜா என்கிற இரு மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் இருக்கின்றார்கள்.
விவசாயி முருகேசன் கூடமலையிலிருந்து கடம்பூர் செல்லும் சாலையில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தங்கள் குடும்பத்துடன் தங்கி விவசாயத்தை மேற்கொண்டு வந்திருக்கிறார் .இவரின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலகிருஷ்ணன் என்பவரின் மகன் சாமிதுரை என்பவன் கூடமலையிலுள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருந்தபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்திருக்கிறான். அதிலிருந்து அவனுக்கு ரோஜா மீது ஒருதலையாக காதல் ஏற்பட்டதாம் அதன் காரணமாக அடிக்கடி கல்லூரி மாணவியின் ஊரான கூடமலைக்கு வந்திருக்கிறான். மாணவி கல்லூரிக்கு செல்லும்போது பேருந்திலும் பேருந்து நிறுத்தத்திலும் ,அடிக்கடி சென்று மாணவியிடம் வற்புறுத்தி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்திருக்கிறான். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறான், மறுத்தாள் கொலை செய்து விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறான்.
இச்சம்பவம் மாணவி ரோஜாவின் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து ஊரில் உள்ள பெரிய மனிதர்களிடம் இது சம்பந்தமாக முறையிட்டு இருக்கிறார்கள். இது சம்மந்தமாக சாமிதுரையின் உறவினர்களை அழைத்து பேசி இருக்கிறார்கள் ,இனி சாமிதுரை இந்த ஊருக்கு வர மாட்டான் என்று கடந்த ஒரு வாரத்திறகு முன்பாக பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் சாமிதுரையின் உறவினர்கள் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை மாணவி ரோஜாவின் வீட்டில் ஆளில்லாத நேரத்தை நோட்டமிட்டு ஆளில்லாததை உறுதி செய்து கொண்டு அவரது தோட்டத்தில் பதுங்கி இருக்கிறான். வெளிச்சம் மறைந்து இருள் சூழ்ந்திருக்கிறது, மாணவி ரோஜா வீட்டின் வெளியே வந்திருக்கிறார் ,அப்போது மறைவில் இருந்த சாமிதுரை வெளியில் வந்து ரோஜா முன் நின்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியிருக்கிறான் ,மறுத்தாள் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான். இதனை மறுத்த ரோஜா கூச்சலிட்டு இருக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து கொண்டு கல்லை தூக்கி பலமாக தலையில் அடித்திருக்கிறான் .ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்களையும் தடுக்க வந்தவர்களையும் தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி இருக்கிறான்.
உடனே ரோஜாவை மீட்ட உறவினர்கள் கூடமலையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி ரோஜா இறந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் வந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அதன்பிறகு டிஎஸ்பி ராமச்சந்திரன் உறவினர்களிடம் நடந்த கொலையை நேரில் பார்த்தவர்கள் மட்டும் இங்கு இருங்கள் மற்றவர்கள் கூட்டம் போடாமல் கலைந்து சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் இதனால் உறவினர்களுக்கும் ,காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாகியுள்ளது.
காதல் என்பது உயிரை கொல்லுவதோ உயிரைப் போக்குவதோ அல்ல…
காலம் சென்றாலும் ,காலனே அழைத்தாலும் கண்டவர்கள் வியந்து ,கேட்டவர்கள் புகழ்ந்து, போற்றும்படி எது வாழ்கிறதோ அதுவே காதல்!
எனவே சாமிதுரையின் காதல் ஒருதலை காதல் அல்ல ,சமுதாய சீர்கேட்டால் விளையும் தருதலை காதல்.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?