மாநாடு 30 July 2022
அதிமுகவில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் யார் உண்மையான அண்ணா திமுக என்பதை நிரூபிக்கும் பல பரிட்சை பல்வேறு வழிகளிலும், நீதிமன்றங்களின் வாயிலாகவும் நடைபெற்று வருகின்றது. இருந்த போதும் அதிமுக தலைமை அலுவலகத்தை நீதிமன்றம் மூலம் கைப்பற்றிய இபிஎஸ் தரப்பு அடுத்தடுத்த நகர்வுகளை நகர்த்தி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.
இதற்கு முன்னதாகவே துணை ஒருங்கிணைப்பாளராக அப்போது அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தையும் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் இபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றவுடன் முக்கிய பொறுப்புக்கள் பல மாற்றப்பட்டது இருந்த போதும் ஓபிஎஸ் தரப்பு நாங்கள்தான் அண்ணா திமுக என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. ஓபிஎஸ் முன்னால் அமைச்சர் வைத்திலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராகவும், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்களை துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்து அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் அதிமுகவின் சார்பாக பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, அதிமுகவின் சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பத்துரை பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. மீண்டும் மீண்டும் இபிஎஸ் தரப்பு ஒவ்வொன்றாக வெற்றி பெற்றே வருகிறது, ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இணை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்ததும் இன்று தான் தஞ்சை வருகிறார் அதற்குள்ளாகவே இந்த செய்தி வந்திருப்பது இபிஎஸ் தரப்பை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஓபிஎஸ் தரப்பை