மாநாடு 15 October 2022
சென்னையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த படுபாதக செயல் நடைபெற்ற அதிர்ச்சியிலும் கோபத்திலும் இருந்து இன்னமும் மீள முடியாமல் இருக்கின்றார்கள் தமிழக மக்கள்.
இந்நிலையில் சென்னை சூலமேட்டில் வீட்டு வேலை செய்து 18 வயதுடைய தன் மகளை கல்லூரியில் ஏழைத்தாய் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றார். அந்தக் கல்லூரி மாணவி படிக்க கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ரசீது என்பவன்
அந்த பெண்ணை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்திருக்கிறான், அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில்,நேற்று கஞ்சா போதையில் பெண் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கையைப் பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது, அப்போது தாயும், மகளும் எழுப்பிய சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் வந்து தகராறில் ஈடுபட்ட ரசீது என்பவனை பிடித்து சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
விசாரணையில் அவன் தொடர்ந்து கல்லூரி மாணவியை தொல்லைப்படுத்தி வந்தது தெரிய வந்திருக்கிறது, ஏற்கனவே ரசீது மீது கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது, கஞ்சா போதையில் வீடு புகுந்து தகராறு செய்த ரசீது மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சூளைமேடு காவலர்கள் நீதிமன்றத்தில் அவனை நேர் நிறுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.