மாநாடு 30 November 2022
உழவர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக அரிசி, சர்க்கரை, கரும்பு ,வெள்ளம் இவற்றோடு பணமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு மளிகை பொருட்கள் ,நெய், கரும்பு, வெள்ளம், உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டும் கொடுக்கப்பட்டது, அதிலும் கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் எழுந்தது, பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. அதனால் திமுக மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தமிழர் திருநாள் பொங்கல் விழா வருவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களோடு 1000 ரூபாய் பணமும், பொருட்களை மஞ்ச பையில் போட்டு தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
