மாநாடு 24 January 2023
ஒரு அதிகாரி சரியான சில நடவடிக்கைகளை எடுத்து அந்நடவடிக்கையின் மூலம் நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமெனில் சுற்றுப்புற காரணிகளும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளும் சரியாக அமைந்தால் மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நோக்கம் முழுமையாக வெற்றி பெறும் என்பது எதார்த்த உண்மை.
சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆசிஷ் ராவத் என்கின்ற அதிகாரி பொறுப்பேற்றார். அது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட காவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமான நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கவும் கூடாது , கள்ளச் சந்தையில் டாஸ்மாக் சாராயங்கள் விற்கப்படும் கூடாது, டாஸ்மாக்கில் வாங்கின்ற மதுபானங்களை பொது இடங்களில் சாலைகளில், தெருக்களில், சந்துக்களில் வைத்து குடிக்க கூடாது அதை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது, பல பகுதிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்தது,
அதே நேரத்தில் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை, உதாரணத்திற்கு பழைய பேருந்து நிலையம் மிக அருகில் இருக்கும் மாட்டு மேஸ்திரி சந்தில் உள்ள மது கடையை அகற்றக்கோரி, அல்லது இந்த இடத்திலிருந்து மாற்றக்கோரி பொதுமக்களும் வணிகர்களும் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார்கள் ஆனாலும் அந்த மது கடை அங்கேயே தான் இயங்கி வருகிறது, அந்தக் கடையின் அருகே எப்போதுமே டாஸ்மாக் மதுவை வெளியில் நின்று குடித்து வருகிறார்கள் அதிலும் மாலை நேரங்களில் அதிகமாக இந்த செயல் நடைபெற்று வருகிறது , கடந்த சனிக்கிழமை 8 மணி வாக்கில் நமக்கு இந்த தகவல் கிடைத்தது சென்று பார்த்த போது கிடைத்த தகவல் உண்மை என்று அறிய முடிந்தது.
அதேபோல தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு இருப்பதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 2217 சாலை விபத்துக்கள் பதிவாகி இருப்பதாகவும் இதனால் 537 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 2327 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு உயிர் என்பது தனிப்பட்ட நபரின் உயிர் அல்ல என்றவர் அந்த உயிரின் இழப்பு அவரை சார்ந்து இருக்கின்ற குடும்பத்திற்கும் , சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும், அந்த நபரின் உயிர் இழப்பினால் அந்த குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாமல் போய்விடுகிறது பொருளாதாரச் சிக்கலிலும் அந்த குடும்பம் சிக்கித் தவிக்கிறது, இவ்வாறான இழப்புகளை ஹெல்மெட் அணிவதன் மூலம் தவிர்க்கலாம் உங்கள் பாதுகாப்பும் குடும்பத்தின் பாதுகாப்பும் ஹெல்மெட் அணிவதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது, எனவே வருகிற வியாழக்கிழமை 26 ஆம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அவரது செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறார் , அணியாதவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்.
ஹெல்மெட் அணிவதன் மூலம் சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும்போது உயிரை காக்கலாம் என்பது எவ்வளவு உண்மையோ
அதேபோல சாலைகளை சரியாக போடுவதன் மூலமும், சாலை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதன் மூலமும், ஏற்படும் சாலை விபத்துகளையே தவிர்க்கலாம் என்பதும் உண்மையே.
இன்னமும் மாற்றப்படாமல் இருக்கும் டாஸ்மாக் நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ? போராடிய மக்களின் வீடியோ லிங்க் : https://youtu.be/1YrWlHNAFL4