மாநாடு 20 January 2024
தமிழ்நாடு அரசு பணியாளர்களின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று 20-01-2024 காலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.வேழவேந்தன் தலைமை தாங்கினார், வருவாய்த் துறையை சேர்ந்த முருககுமார் வரவேற்புரையாற்றினார் , அதனை அடுத்து தோழமை சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பால்பாண்டியன் தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த தரும.கருணாநிதி உள்ளிட்டவர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்வின் முடிவில் பேரூராட்சி துறையை சேர்ந்த செல்வராஜ் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார் அனைவரின் கருத்துக்களையும் கலந்தாய்வு செய்து ஏக மனதாக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தனிமனிதனுக்கு தன் குழந்தை எப்படியோ அதே போல தான் அரசு ஊழியர்கள் அரசின் குழந்தைகள் தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது அரசு ஊழியர்கள் தான் என்று தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் திமுக ஆட்சி அமைத்த உடன் உங்களது கோரிக்கைகள் உடனடியாக 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்த பல முக்கிய கோரிக்கைகள் இன்று வரை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என்பதையே தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுவில் ஒரு மனதாக ஏற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் காட்டுகிறது.
இப்போதாவது செவி சாய்பாரா முதல்வர் ? நிறைவேற்றப்படுமா இவர்களின் தீர்மானங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
Rely on BWER Company for superior weighbridge solutions in Iraq, offering advanced designs, unmatched precision, and tailored services for diverse industrial applications.