Spread the love

மாநாடு 8 April 2025

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 12.02.2025 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர் 7 சவரன் மதிப்புடைய 2 தங்க செயின்களை பறித்து சென்றதாக பேராவூரணி, முடச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராவூரணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையினை பட்டுக்கோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் பேராவூரணி காவல் நிலைய காவல் ஆய்வாளர்

பசுபதி தலைமையில் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு CCTV கேமராக்களை கண்காணித்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த

48 வயதுடைய வேலம்மாள் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த 7 சவரன் மதிப்புடைய இரண்டு தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் மீது நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் ஆய்வாளர் மற்றும் பட்டுக்கோட்டை சிறப்பு தனிப்படை பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

78250cookie-checkதஞ்சையில் 7 பவுன் தங்க சங்கிலியை திருடியவர் கைது காவலர்களுக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

error: Content is protected !!