Spread the love

மாநாடு 15 March 2022

பலரும் இன்றைய காலகட்டத்தில் அரசு வேலையில் சேர்ந்தால் நம் குடும்பத்திற்கு பாதுகாப்பு இருக்கிறது மாதம் பிறந்தால் சம்பளம் இருக்கிறது என்கிற எண்ணத்தில் அதிகமாக அரசு வேலையில் சேர்கின்றனர்.

இந்த சூழலில் பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்து அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்துதற்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.அத்துடன் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார் .அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது நல்ல நடவடிக்கை அல்ல என்பதை குறிப்பிட்டுள்ள நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 4 வாரங்களில் இந்த உத்தரவை நிறைவேற்றவும் ஆணையிட்டுள்ளார்.

24950cookie-checkஅரசு ஊழியர்களுக்கு தடை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Leave a Reply

error: Content is protected !!