மாநாடு 3 August 2022
இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவர்கலால் நேரு சுதந்திரத்திற்கு முன் நேஷனல் ஹெராய்டு பத்திரிக்கையை நடத்தி வந்தார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தங்கள் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது.இதில் மோசடி நடந்து உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடத்தியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் அவரது மகனும் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது.நேற்று ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி டில்லியில் உள்ள ஐ.டி.ஓ.வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை நடந்தது.
இந்நிலையில் இன்று டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
தங்களின் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கையாக சோனியா மற்றும் ராகுல் இல்லங்களுக்கு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.