Spread the love

மாநாடு 9 March 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை வகித்து வந்த பேரறிவாளன் கடந்த சில மாதங்களாக பரோல் கிடைத்ததன் விளைவாக வெளியில் தான் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பரோல் மற்றும் ஜாமீன் ஆகிய இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை பார்க்கலாம் .

பரோல் என்பது மாநில அரசு தன்னுடைய விருப்பத்தின் பெயரில் தருவது.காலம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த பரோல் கடும் கட்டுப்பாடுகளை கொண்டது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பரோல் பெற்றவர் எதையும் செய்ய முடியாது.எங்கு சென்றாலும் அவர் பின்னால் போலீஸ் பாதுகாப்புடன் செல்லும்.கிட்டத்தட்ட வீட்டு சிறையில் இருப்பது போன்று தான் பரோல் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் ஜாமீன் என்பது பரோலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, எந்த காவல்துறை காவலர்கள் எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மற்றும் ஜாமீன் பெற்ற நபர் நீதிமன்ற நிபந்தனைக்கு கட்டுபட்டு நினைத்த இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

23720cookie-checkபேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது பரோல்,ஜாமீன் வேறுபாடு?

Leave a Reply

error: Content is protected !!