மாநாடு 28 February 2023
இன்னமும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பவர்கள் பலர் அவர்களுக்கான அறிவிப்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
2023 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 560 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியாக உள்ள பணிகளாக அறிவிக்கப்பட்டிருப்பது: நர்ஸ், மெடிக்கல் ஆபீஸர் , ஹெல்த் இன்ஸ்பெக்டர், சப்போர்ட்டிங் ஸ்டாப்,
கல்வி தகுதி அறிவிக்கப்பட்டிருப்பது: 8ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு ,ஐடிஐ , நர்சிங்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 7-3- 2023 .
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னையில் பணியமத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் மேலும் அதிக விவரங்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்க இந்த இணைப்பை தொட்டு தெரிந்து கொள்ளுங்கள்: https://chennaicorporation.gov.in/gcc/
மாநாடு செய்தி குழுமத்தின் அறிவுறுத்தல் : சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக யார் சொன்னாலும், வேலைக்கான ஆர்டர் காப்பி இதோ என்று காட்டினாலும் கூட நம்பி யாரும், யாரிடமும் எவ்வித பணமும் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு அப்பாவிகளின் பணத்தை பிடுங்கி ஏமாற்றியவர்கள் செய்தியை அறிந்திருக்கிறோம் எனவே இதை தெரியப்படுத்துகிறோம்.