Spread the love

மாநாடு 29 April 2022

இந்தியை வைத்து இப்போதும் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஆங்கிலத்திற்கு மாற்றாக நாட்டு மக்கள் அனைவரும் இந்தியை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தி மொழி விவாதத்திற்கு மத்தியில் உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் இந்தியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினர் என்று கருதப்படுவார்கள் என்றும் இந்தி பேசாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிட வேண்டும் என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சஞ்சய் நிஷாத், இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும்.நீங்கள் இந்தியை நேசிக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர் என்று கருதப் படுவீர்கள் நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம் ஆனால் இந்த நாடு இந்தியா எனும் ஒரே நாடு தான் இந்துஸ்தான் அதாவது இந்தி பேசுபவர்களுக்கான இடம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.எனவே இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல அவர்கள் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும் என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது. மேலும் அமைச்சர் சஞ்சய் நிஷாத் பாஜகவின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியின் தலைவர் இவர் .Nirbal Indian Shoshit Hamara Aam Dal இதன் சுருக்கமே நிஷாத் என்பதாகும் இந்த கட்சி 2016ஆம் ஆண்டு இவரால் துவங்கப்பட்டது தற்போது யோகியின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

32810cookie-checkநாட்டை விட்டு வெளியேறுங்கள் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Leave a Reply

error: Content is protected !!