மாநாடு 26 July 2022
இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் விலைவாசி உயர்வையும், மின் கட்டண உயர்வையும், கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ரயிலடியில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றார்கள், சமீப காலங்களில்
அதிமுக போராட்டத்தில் இவ்வளவு பெருவாரியான கூட்டங்களை கண்டதில்லை என்றார்கள் அங்கு கூட்டத்திற்கு வந்தவர்கள். இந்தப் போராட்டம் திமுகவிற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல் அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் வலிமையையும் நிரூபிக்க வேண்டிய இத்தருணத்தில்
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் ஆர்ப்பாட்டமாக நடத்திக் காட்டியதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வெற்றி கண்டு இருக்கின்றார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு முன்னாள் மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் வீரவாள் கொடுத்தார், முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது ஒரு சமயத்தில் அண்ணா திமுகவை எம்ஜிஆர் துவங்கிய போது சிறியவர்கள் ,பெரியவர்கள், பெண்கள் என அனைவரின் ஆதரவும் ஆர்ப்பரிப்பும் இருந்தது, அதை சற்றும் குறையாமல் அதிகப்படுத்தி கட்டிக் காத்தவர் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள்
அவரின் மறைவுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி பல வேலைகளில் இறங்கியது, இருந்த போதும் அதனை கட்டிக் காக்கும் பெரும் பொறுப்பை திறம்பட செய்தவர் நமது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை முழுமையாக செயல்பட விடாதவாறு பலர் நமது இயக்கத்தின் உள்ளே இருந்து செயல்பட்டு வந்தார்கள். அவர்களை நீக்கிய பிறகு தற்போது தொண்டர்களின் பேராதரவோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் எழுச்சியோடு எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கூடிய கூட்டமாக தான் நான் பார்க்கிறேன் தஞ்சையில் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் கூட்டங்கள் நடந்த போது கூட இவ்வளவு கூட்டத்தை
தஞ்சையில் சமீபத்தில் நாம் கண்டதில்லை என்றார் மேலும் மக்கள் ஏற்கனவே கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் விடியா திமுக ஆட்சி பல்வேறு கஷ்டங்களை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஏற்கனவே வீட்டு வரி உயர்த்தி உள்ளது பல்வேறு விலை உயர்வுகளை தாங்க முடியாமல் மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள் இந்த நேரத்தில் மின்கட்டணத்தையும் உயர்த்துவதை ஏற்க முடியாது. மின் கட்டண உயர்வை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்றார் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ்.
அதற்கு முன்னதாக பேசிய காந்தி தஞ்சையில் அண்ணா திமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் அழித்துவிட முடியாது நாங்கள் இருக்கிறோம் கட்டிக் காப்பாற்றுவோம் என்று சூளுரைத்தார்,
ஏற்கனவே வீடுகளின் வரியை திமுக அரசு உயர்த்தியபோது அதனை கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் தலைமையில் ஒரு மணி நேரம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் இன்று ரயிலடியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மக்கள் வெள்ளத்தால் நிரப்பி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.