Spread the love

மாநாடு 3 August 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகில் உள்ள திருமலை சமுத்திரம் என்ற பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு போக்கு காட்டி வரும் சாஸ்திர பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து உடனடியாக அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அரசு தவறும் பட்சத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 35 ஆண்டுகளாக அரசின் நிலத்தை ஆக்கிரமித்து, பல கோடி மதிப்பு கட்டடங்களைக் கட்டி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகிறது சாஸ்திர பல்கலைக்கழகம். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பைஅகற்ற உத்தரவிட்டும் அதனை அரசு நிறைவேற்றவில்லை. சிறு சிறு ஆக்கிரமிப்புகள், சிறு குடிசைகள் ஃபுல்டோசர்களை வைத்து இடித்து தள்ளுகின்ற போது குடியிருந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கதறி அழுவதை எல்லாம் பொருட்படுத்தாமல் இடித்து தள்ளி விட்டு அப்புறப்படுத்தும் அரசு அதிகாரிகள் 35 ஆண்டுகளாக 31.37 ஏக்கர் ஆக்கிரமிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருந்தது வந்தது கண்டனத்திற்குரியது. 35 ஆண்டுகளாக ஏன் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்பும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

மக்கள் நலனுக்கு எதிராக ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களுக்கு ஈடாக மாற்று இடம் தர வருவாய்துறை நிலையாணையில் தமிழக அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அரசாணையை பயன்படுத்தி அரசு நிலத்தை அபகரிக்க சாஸ்திர பல்கலைக்கழகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது நீதிமன்றத்தில் முறையிட்டு நீதி அரசர்களால் மேற்கண்ட அரசாணை குறித்து மூன்று நாட்களுக்குள் பரிசீலிக்க நீதியரசர்கள் உத்திவிட்டுள்ளனர். அரசு தரப்பில் இது நீர்நிலை புறம்போக்கு என்றும் அரசாணை இவர்களுக்கு பொருந்தாது என்றும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து சாஸ்த்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31.37 ஏக்கர் அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என தமிழக அரசையும், தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. உறுதியான நடவடிக்கை இல்லையெனில் விரைவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் க.மு.ராமசாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பா.பாலசுந்தரம், வீரமோகன், சி.பக்கிரி சாமி, மாவட்ட பொருளாளர் ந.பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் ஆர்.பிரபாகரன், திருவோணம் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் துரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், வெ.சேவையா, தி.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

46420cookie-checkதமிழக அரசு சாஸ்திராவை இடிக்க வில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!