Spread the love

மாநாடு 23 July 2022

அரியலூர் மாவட்டத்தில் சிலால் என்கிற பகுதியில் தா.பழூர் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள் ,அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி நாயின் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று இருக்கிறது அதனை கண்ட தா.பழூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் அந்த வாகனத்தை விரட்டி மடக்கிப் பிடித்து இருக்கிறார், லாரியின் ஓட்டுனரிடம் ஓட்டுனர் உரிமத்தை எடு என்று கேட்டிருக்கிறார் அப்போது எடுப்பது போல போக்கு காட்டிவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடி இருக்கிறார். காவலர்கள் அவரை தேடி வருகிறார்கள்.

லாரியை சோதனை செய்த காவலர்கள் அதிர்ந்து இருக்கிறார்கள், லாரியில் பழைய துணி என்று எழுதப்பட்டு சாக்குகளில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.அதன் எடை 5 டன் என்று கூறப்படுகிறது, 48 சணல் சாக்குகளிலும் 24 வெள்ளை சாக்குகளிலும் மூட்டைகளாக கட்டப்பட்டு கடத்தப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் 7

அட்டைப்பெட்டிகளிலும் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது இவை அனைத்தையும் லாரியோடு காவலர்கள் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

இதை அனுப்பியவர்கள் யார். எங்கு எடுத்து செல்கிறார்கள். லாரி யாருடையது உட்பட பல்வேறு கோணங்களிலும் காவலர்கள் தீவிர விசாரணை செய்கிறார்கள் தப்பியோடிய லாரி ஓட்டுநரை பிடிக்கும் பணியிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்

44870cookie-checkலாரியில் போதைப்பொருள் கடத்தல் விரட்டிப் பிடித்த காவல் ஆய்வாளர்

Leave a Reply

error: Content is protected !!