Spread the love

மாநாடு 9 March 2022

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய இந்திய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர்ச்சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அவரவர் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பினைத் தொடர இந்திய மருத்துவக் கழகம் உரிய அனுமதியளிக்க வேண்டும்.

நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிகக் கல்விக் கட்டணம் காரணமாகவும், இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதால் உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவம் படித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் தற்போதைய கடும்போர் காரணமாகத் தாயகம் திரும்ப வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மிக ஆபத்தான போர் தாக்குதல்களிலிருந்து ஊன், உறக்கமின்றி, மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மாணவச் செல்வங்கள் மனதளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்வியை மீண்டும் தொடர முடியுமா? என்ற ஐயத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

தாயகம் திரும்புவதற்காக மாணவ, மாணவியர் பெரும் பண இழப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக பெற்ற வங்கி கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

போர் தொடங்கிய சமயத்தில் அங்கு மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர். இதையடுத்து அண்டை நாடுகளின் உதவியுடன் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரேனில் சிக்கியவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

உக்ரைன் நாட்டில் போருக்குப் பின் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரியாததால், தாயகம் திரும்பிய மாணவர்களின் படிப்பு என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை 1456 மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்க் https://twitter.com/SeemanOfficial/status/1501448217354903555?s=20&t=MET-TuquS9ZA3FJ7mFllgg

 

23650cookie-checkசீமான் அறிக்கை மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!